பேரியல் பொருளாதாரத்தின் முக்கியத்துவத்தை தருக
Answers
Answered by
1
Don't know what ur saying
pls forgive me
Answered by
7
பேரியல் பொருளாதாரத்தின் முக்கியத்துவம்
- பேரியல் பொருளாதாரம் ஆனது ஒரு பொருளாதார அமைப்பின் ஒட்டு மொத்த செயல்பாடுகளை புரிந்து கொள்ள, அதற்கு உகந்த சரியான முறைகளை மாற்ற மற்றும் பொருளாதாரத்தின் அடிப்படை பிரச்சனைகளுக்கு தீர்வு காண பயன்படுகிறது.
- எதிர்காலப் பிரச்சனைகளை புரிந்துக் கொள்ள, தேவைகள் மற்றும் சவால்களை எதிர்கொள்ள மற்றும் தேவையான முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க பேரியல் பொருளாதாரம் பெரிதும் உதவுகிறது.
- பேரியல் பொருளாதாரம் ஆனது அறிவியல் பூர்வ விசாரணையின் மூலம் நடப்பு பிரச்சினைகளை அறிய வாய்ப்பினை வழங்குகிறது.
- பொருளாதாரக் குறியீடுகளை பகுத்தாய்வு செய்யவும், பொருளாதாரக் குறியீடுகளை ஒப்பிடவும் பேரியல் பொருளாதாரம் பயன்படுகிறது.
- பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண, சரியான கொள்கையை உருவாக்க பேரியல் பொருளாதாரம் பயன்படுகிறது.
Similar questions