பணவீக்கத்திற்கு சரிபடுத்தப்பட்ட தேசிய
வருவாயின் மதிப்பு ___________ என
அழைக்கப்படுகிறது
அ. பணவீக்க வீதம்
ஆ. செலவிடக்கூடிய வருமானம்
இ. GNP
ஈ. உண்மைத் தேசிய வருவாய்
Answers
Answered by
0
உண்மைத் தேசிய வருவாய்
- ஒரு ஆண்டில் உள்ள பொது விலை அளவுகளின் அடிப்படையில் தேசிய வருமானத்தினை மதிப்பிடுவது பண வருவாய் என அழைக்கப்படுகிறது.
- இதற்கு மாறாக ஒரு ஆண்டில் உற்பத்தி செய்யப்பட்ட முடிவுற்ற பண்டங்கள் மற்றும் பணிகளின் மொத்த மதிப்பை பண அளவுகளில் குறிப்பிடப்படுவது தேசிய வருவாய் என அழைக்கப்படுகிறது.
- பண வீக்கத்திற்கு சரிபடுத்தப்பட்ட தேசிய வருவாயின் மதிப்பு உண்மைத் தேசிய வருவாய் என அழைக்கப்படுகிறது.
- உண்மைத் தேசிய வருவாயை நிலையான விலையில் தேசிய வருமானம் = நடப்பு விலையில் தேசிய வருவாய் ÷ P1 / P0 என்ற சூத்திரத்தின் மூலம் கணக்கிடலாம்.
- இதில் P1 என்பது நடப்பு ஆண்டு விலைக் குறியீடு மற்றும் P0 என்பது அடிப்படை ஆண்டின் விலைக்குறியீடு ஆகும்.
Similar questions