கீன்ஸின் நுகர்வு சார்ந்த உளவியல் விதியின் கருத்துகளைக் கூறுக
Answers
Answered by
3
கீன்ஸின் நுகர்வு சார்ந்த உளவியல் விதியின் கருத்துகள்
- நுகர்வு செலவு ஆனது வருமானம் உயரும் போது உயருகிறது.
- எனினும் உயர்வு சிறிய அளவாக இருக்கும்.
- இதற்கு காரணம் வருமானம் உயரும் போது, நம் விருப்பமும் படிப்படியாக நிறைவேறும்.
- இதன் காரணமாக நுகர்வு பொருட்களின் மீது செய்யும் செலவானது குறைகிறது.
- எனவே நுகர்வு செலவு ஆனது வருமானம் அதிகரிக்கும் போது அதிகரிக்கும், ஆனால் குறைந்த அளவே அதிகரிக்கும்.
- நுகர்வு செலவு மற்றும் சேமிப்பு ஆகிய இரண்டிற்கும் இடையே சில விகிதத்தில் அதிகரித்த வருமானம் ஆனது பிரிக்கப்படுகிறது.
- முழுமையான அதிகரித்த வருமானம் நுகர்வின் மீது முழுமையாக செயல்படாமல், கொஞ்சம் சேமிக்கப்படுகிறது.
- எனவே இது முதல் கருத்தின் தொடர்ச்சி ஆகும்.
- இதன் வழியில் நுகர்வு மற்றும் சேமிப்பு ஒன்றோடு ஒன்று நகர்கிறது.
- அதிகரிக்கின்ற வருமானம் ஆனது எப்போதும் நுகர்வு மற்றும் சேமிப்பு ஆகிய இரண்டையும் உயர்த்துகிறது.
- அதிகரித்த வருமானம் ஆனது நுகர்வு அல்லது சேமிப்பு ஆக மாறும்.
- எனவே அதிகரிகின்ற வருமானம் ஆனது நுகர்வு மற்றும் சேமிப்பு என இரண்டையும் அதிகரிக்கும்.
Similar questions