பணமதிப்பு நீக்கத்தின் நோக்கங்களை குறிப்பிடுக.
Answers
Explanation:
நவம்பர் 8 ஆம் இரவு எட்டு மணிக்கு இன்று நள்ளிரவிலிருந்து 500 மற்றும் 1000 ரூபாய் செல்லாது என்று அறிவித்தார்.
ஐம்பது நாட்கள் பொறுமையாக இருக்க சொன்னார். அவர் தனது பேச்சில், "சகோதரர்களே மற்றும் சகோதரிகளே, நான் இந்த நாட்டினரிடம் 50 நாட்கள் கோருகிறேன். வெறும் 50 நாட்கள். எனக்கு டிசம்பர் 30 ஆம் தேதி வரை நேரம் தாருங்கள். நான் செய்தது தவறு அல்லது என் நோக்கம் தவறு என்று நிரூபிக்கப்பட்டால் எனக்கு என்ன தண்டனை வேண்டுமானாலும் அளியுங்கள்" என்றார்.
இது பயங்கரவாதம் மற்றும் தீவிரவாதத்திற்கு எதிரான துல்லிய தாக்குதல் என்று வர்ணித்தார். மேலும் கருப்புப் பணத்திற்கு எதிரான நடவடிக்கை என்றார்.
பின், பணமற்ற பரிவர்த்தனை மற்றும் டிஜிட்டல் சமூகத்தை நோக்கிய பயணம் என்றார்.
இரண்டு ஆண்டுகளுக்குப் பின் மோதி அரசு இந்த லட்சியங்களை எல்லாம் அடைந்துவிட்டதாக கூறுகிறது.
நிதித்துறை அமைச்சர் அருண் ஜெட்லி, "வரிபணம் இந்த நடவடிக்கையால் அதிகரித்து இருக்கிறது" என்றார்.
கருப்புப் பணம் கண்டுபிடிக்கப்பட்டதா?
எதற்காக பணமதிப்பு நீக்கம் செய்யப்பட்டதோ அந்த லட்சியம் அடையப்பட்டுவிட்டதென்று அரசு கூறினாலும், ரிசர்வ் வங்கி தரும் தரவுகள் அவ்வாறானதாக இல்லை.
99.3 சதவீத பணம் மீண்டும் வந்துவிட்டதாக ரிசர்வ் வங்கி கூறுகிறது.
பணமதிப்பு நீக்கம் செய்யப்பட்ட போது, சுழற்சியில் 15 லட்சத்து 41 ஆயிரம் கோடி ரூபாய் பணம் இருந்ததாகவும். அவற்றில் 15 லட்சத்து 31 ஆயிரம் கோடி ரூபாய் பணம் மீண்டும் வங்கிகளுக்கே வந்துவிட்டதாகவும், வெறும் பத்தாயிரம் கோடி ரூபாய் பணம் மட்டுமே திரும்ப வரவில்லை என்றும் கூறியது ரிசர்வ் வங்கி. இதிலும், அந்த சமயத்தில் நேபால் மற்றும் பூடானில் பயன்பாட்டில் இருந்த இந்திய ரூபாய் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை.
பணமதிப்பு நீக்கத்தின் நோக்கங்கள்
பண மதிப்பு நீக்கம்
- அரசின் சட்ட பூர்வ பணத் தொகுப்பில் இருந்து குறிப்பிட்ட அலகிலான பணத்தின் மதிப்பினை செல்லாது என அறிவிக்கும் செயலுக்கு பண மதிப்பு நீக்கம் என்று பெயர்.
- நம் நாட்டில் 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 8ம் தேதி இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியில் ரூ. 500 மற்றும் ரூ. 1000 மதிப்பிலான காகிதப் பணங்கள் பண மதிப்பு நீக்கம் செய்யப்பட்டன.
பணமதிப்பு நீக்கத்தின் நோக்கங்கள்
- கருப்புப் பணத்தினை ஒழித்தல், இலஞ்சத்தை தடுத்தல், தீவிரவாதித்திற்கு பணம் செல்வதை தடுத்தல் மற்றும் கள்ளப் பணத்தினை தடுத்தல் முதலியன பணமதிப்பு நீக்கத்தின் நோக்கங்கள் ஆகும்.