அயல்நாட்டுச் செலுத்துநிலை கூறுகள் கீழ்
கண்டவைகளில் எவை
அ. நடப்பு கணக்கு
ஆ. மைய வங்கி இருப்பு
இ. மூலதன கணக்கு
ஈ. அ,ஆ,இ மூன்றும்
Answers
Answered by
0
அ, ஆ, இ மூன்றும்
- அயல் நாட்டுச் செலுத்துநிலையின் கூறுகள் நடப்பு கணக்கு, மைய வங்கி இருப்பு மற்றும் மூலதன கணக்கு ஆகும்.
நடப்பு கணக்கு
- நடப்பு கணக்கின் கீழ் பன்னாட்டு பண்ட பரிவர்த்தனைகள், பன்னாட்டு பணி பரிவர்த்தனைகள், உற்பத்திக் காரணி வருவாய் மற்றும் பரிசுத் தொகை பரிவர்த்தனைகள் முதலியன பதிவு செய்யப்படுகின்றன.
மூலதன கணக்கு
- மூலதன கணக்கின் கீழ் வெளி நாட்டுக் கடன், அந்நிய முதலீடு, பன்னாட்டு பண மற்றும் நிதி சந்தை விற்றல் வாங்கல் பரிவர்த்தனைகள் முதலியன பதிவு செய்யப்படுகின்றன.
மைய வங்கி நிதி சொத்து கையிருப்புக் கணக்கு
- மைய வங்கி நிதி சொத்து கையிருப்புக் கணக்கில் மைய வங்கியின் கையிருப்பில் உள்ள செலாவணி சொத்துக்களில் நடைபெறும் பரி வர்த்தனைகள் பதிவு செய்யப்படுகின்றன.
Similar questions