உள்நாட்டு வாணிகத்துக்கும் பன்னாட்டு வாணிகத்துக்குமிடையிலான வேறுபாடுகளை
விவாதிக்கவும்
Answers
Answered by
0
உள்நாட்டு வாணிகத்துக்கும் பன்னாட்டு வாணிகத்துக்கும் இமிடையிலான வேறுபாடுகள்
உள்நாட்டு வாணிகம்
- ஒரு நாட்டின் அரசியல் மற்றும் புவி எல்லைகளுக்கு உள்ளேயே பொருட்கள் மற்றும் பணிகளை பரிமாறிக் கொள்வதற்கு உள்நாட்டு வாணிகம் என்று பெயர்.
- ஒரு நாட்டின் பகுதிகளுக்கிடையே உழைப்பு மற்றும் மூலதனம் இடம் பெயர்தலுக்கு தடைகள் கிடையாது.
- பொருட்கள் மற்றும் பணிகள் இடம் பெயர்தலில் தடைகள் கிடையாது.
- ஒரே நாட்டு பணம் மட்டுமே பயன்படுகின்றது.
- ஒரே மாதிரியான வாணிக மற்றும் நிதி நடைமுறைகள் உள்ளன.
பன்னாட்டு வாணிகம்
- இரு அல்லது அதற்கு மேற்பட்ட நாடுகள் பொருட்கள் மற்றும் பணிகளை பரிமாறிக் கொள்வதற்கு பன்னாட்டு வாணிகம் என்று பெயர்.
- இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நாடுகளுக்கு இடையே உழைப்பு மற்றும் மூலதனம் இடம் பெயர்தல் தடைகளுக்கு உட்பட்டது ஆகும்.
- பொருட்கள் மற்றும் பணிகள் இடம் பெயர்தலில் சுங்கவரி மற்றும் பங்களவு போன்ற தடைகள் உள்ளன.
- பல நாட்டு பணங்கள் பயன்படுகின்றன.
- வேறுபட்ட வாணிக மற்றும் நிதி நடைமுறைகள் உள்ளன.
Similar questions