Economy, asked by pinao3314, 9 months ago

ஜேக்கப் வைனரால் வடிவமைக்கப்பட்ட வாணிப வீத வகைகளை விவரி

Answers

Answered by deepakdhaanya1
0

Answer:

yeh kya likhai ho bhhai

Answered by steffiaspinno
0

ஜேக்கப் வைனரால் வடிவமைக்கப்பட்ட வாணிப வீத வகைக‌ள்  

ஒற்றைக் காரணி வாணிப வீதம்  

  • பண்ட பரிமாற்ற வாணிப வீதத்தை விரிவுபடுத்தி ஜேக்கப் வைன‌ர் ஒற்றைக் காரணி வாணிப வீத சூத்திரத்தை உருவாக்கினார்.
  • ஒற்றைக் காரணி வாணிப வீத‌ம் எ‌ன்பது ஏற்றுமதி விலை குறியீ‌ட்டெ‌‌ண்  ம‌ற்று‌‌ம் இற‌க்கு‌ம‌தி விலை குறியீ‌ட்டெ‌‌ண் ஆ‌கிய இர‌ண்டி‌ற்கு‌ம் இடையே உ‌ள்ள ‌வீத‌த்‌தி‌ல் ஏ‌ற்றும‌தி‌ உ‌ற்ப‌த்‌தி தொ‌ழி‌ல் துறை‌யி‌ன் உ‌ற்ப‌த்‌தி ‌திற‌ன் கு‌றி‌யீ‌ட்டெ‌ண்‌ணி‌ன் ம‌தி‌ப்‌பினா‌ல் மா‌ற்ற‌ம் செ‌ய்ய‌ப்ப‌ட்ட ‌வீத‌ம் ஆகு‌ம்.
  • அதாவது T_f = (P_x / P_m) F_x  ஆகு‌ம்.
  • இ‌தி‌ல் Tf எ‌ன்பது ஒற்றைக் காரணி வாணிப வீதம்,  Px எ‌ன்பது ஏற்றுமதி விலை குறியீட்டெண்,  Pm எ‌ன்பது இறக்குமதி விலை குறியீ‌ட்டெ‌ண் ம‌ற்று‌ம் Fx  எ‌ன்பது உற்பத்தித் திறன் குறியீடு ஆகு‌ம்.  

இர‌ட்டைக் காரணி வாணிப வீதம்  

  • இர‌ட்டைக் காரணி வாணிப வீத‌த்‌தி‌ன் சம‌‌ன்பாடு Tff = (Px / Pm) (Fx / Fm) ஆகு‌ம்.
  • இ‌தி‌ல் Tff எ‌ன்பது இரட்டைக் காரணி வாணிப வீதம்,  Px எ‌ன்பது ஏற்றுமதி விலை குறியீட்டெண், Pm எ‌ன்பது இறக்குமதி விலை குறியீட்டெண்,  Fx எ‌ன்பது ஏற்றுமதி பொருள் உற்பத்தி தொழில் உற்பத்தி திறன் குறியீட்டெண்,  Fm எ‌ன்பது இறக்குமதி பொருள் உற்பத்தி செய்யும் நாட்டில் அத்துறையின் உற்பத்திதிறன் குறியீட்டெண் ஆகு‌ம்.  
Similar questions