பொருளாதார ஒருங்கிணைப்பின் பல்வேறு வடிவங்களைக் குறிப்பிடுக.
Answers
Answered by
0
Answer:
your language is not understandable
Answered by
0
பொருளாதார ஒருங்கிணைப்பின் வடிவங்கள்
தடையற்ற வாணிகப் பகுதி
- தடையற்ற வாணிகப் பகுதியில் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்ட உறுப்பினர் நாடுகள் அனைத்தும் ஒரே மண்டலமாக எண்ணி வாணிகத் தடைகளை குறைக்க ஒத்துழைக்கும்.
- (எ.கா) SAFTA, EFTA
சுங்கவரி ஒன்றியம்
- சுங்கவரி ஒன்றியம் என்பது உறுப்பு நாடுகளுக்கு இடையே உள்ள வாணிகத்தில் வரி விதிக்காமலும், உறுப்பினர் அல்லாத நாடுகளுக்கு வாணிகத்தில் பொது வரி விதித்தும் ஒத்துழைக்கும் அமைப்பு என அழைக்கப்படுகிறது.
- (எ.கா) BENELUX (பெல்ஜியம், நெதர்லாந்து மற்றும் லக்ஸம்பர்க்).
பொது சந்தை
- பொது சந்தை என்பது தடையற்ற வாணிகம் மற்றும் உற்பத்திக் காரணிகள் இடப்பெயர்விற்காக உறுப்பு நாடுகளால் உருவாக்கப்படும் அமைப்பு ஆகும்.
- (எ.கா) ஐரோப்பிய பொது அங்காடி.
பொருளாதார ஒன்றியம்
- பொருளாதார ஒன்றியம் என்பது பொது சந்தை மற்றும் சுங்கவரி ஒன்றியத்தினை இணைத்து உருவாக்கப்படும் அமைப்பு ஆகும்.
- (எ.கா) ஐரோப்பிய பொருளாதார ஒன்றியம்
Similar questions