சூழலியல் என்றால் என்ன?
Answers
Answer:
சூழலியல் (Ecology) என்பது, உயிர் வாழ்க்கையின் பரவல் பற்றியும், உயிரினங்களுக்கும் அவற்றின் இயற்கைச் சூழலுக்கும் இடையிலான இடைவினைகள் பற்றியும் அறிவியல் அடிப்படையில் ஆய்வு செய்யும் துறையாகும். ஒரு உயிரினத்தின் சூழல் என்பது சூரிய ஒளி, காலநிலை, நிலவியல் அம்சங்கள் போன்ற உயிரற்ற காரணிகளின் ஒட்டுமொத்த அளவான இயற்பியல் இயல்புகளையும்; குறிப்பிட்ட வாழிடத்தில் வாழும் பிற உயிரினங்களைக் கொண்ட உயிர்சார் சூழல் மண்டலத்தையும் (ecosystem) உள்ளடக்கியதாகும்.
சூழலியல்
The Earth seen from Apollo 17.jpg
Hawk eating prey.jpgEuropean honey bee extracts nectar.jpg
Bufo boreas.jpgBlue Linckia Starfish.JPG
சூழலியல் நுண்ணுயிரிகளிலிருந்து, பேரண்டம் வரைப் பரந்து உயிர்வாழ்க்கையை உய்த்துணரப் பயன்படுகிறது. சூழலியல் வல்லுநர்கள் உயிர்களின் பல்வகைமையை ஆராய்ந்து அவற்றிற்கிடையேயுள்ள தொடர்புகளை விளக்குகின்றனர். மேலும் இவ்வேறுபாடானது அவற்றின் உணவு, உறையுள், சமூகம் மற்றும் இனவிருத்தி ஆகிய கூறுகளினால் விளக்கப்பெறும்.
சூழல் என்பது தாவரங்கள், விலங்குகள் அடங்கிய அனைத்து உயிரினங்களுடன், அவற்றுடன் தொடர்பு கொண்டிருக்கும் அனைத்து இயற்பியல் கூறுகளையும் அடக்கியதாகும். இவைகளுக்கு இடையே தொடர்புகள், பரிமாற்றங்கள் அல்லது இடைவினைகள் எவ்வாறு நடைபெறுகிறது என்பதைப் பற்றி கற்றுக்கொள்ளுவதே சூழலியல் ஆகும்.
mark as brainleast
சூழலியல் அல்லது சூழல் அமைப்பு
- சுற்றுச்சூழல் என்பது நம்மை சுற்றி உள்ள அனைத்து நிலைமைகள், சூழ்நிலைகள், உயிர்கள் அல்லது உயிர் தொகுப்பு முதலியனவற்றினை குறிப்பிடுவது என அழைக்கப்படுகிறது.
- சூழலியல் அல்லது சூழல் அமைப்பு என்பது ஒரு குறிப்பிட்ட பகுதியில் உள்ள தட்பவெப்ப நிலை, பூமி, மண், வளி மண்டலம் மற்றும் பருவ நிலை உள்ளிட்ட உயிரற்றவைகள் மற்றும் உயிரினங்கள் ஆகிய இரண்டிற்கும் இடையே உள்ள தொடர்பு என அழைக்கப்படுகிறது.
- உயிர்க் கோளத்தின் அடிப்படை சூழல் அமைப்பு ஆகும்.
- மேலும் புவியில் உள்ள உயிரினங்களின் நலத்தினை தீர்மானிக்கும் முக்கிய காரணியாகவும் சூழல் அமைப்பு விளங்குகிறது.
- எளிமையான கூறினால் உயிர் உள்ள சமூகம் மற்றும் உயிர் அற்றவை ஆகிய இரண்டிற்கும் இடையே உள்ள தொடர்பே சூழலியல் ஆகும்.