பொருளாதாரத்திற்கும் சுற்றுச்சூழலுக்கும் உள்ள தொடர்பினை சுருக்கமாக கூறு.
Answers
Answer:
இந்தியப் பொருளாதாரம் அதிவேக வளர்ச்சியடைந்து வருகிறது.
இந்தியாவில் நிலவும் வேலைவாய்ப்பின்மை, 35.4 கோடிமக்களின் (உலக ஏழைகளில் 27% பேர்) வறுமை ஆகியவற்றை எதிர்த்துப் போராட அதிவேக பொருளாதார வளர்ச்சி தான் நாட்டின் இப்போதைய தேவை ஆகும்.
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக இருப்பது தொழில்துறையின் சிறப்பான செயல்பாடும், மின்னனுமாற்றம், தகவல் தொழில்நுட்பம், ஜவுளித்துறை, மருந்து மற்றும் அடிப்படை வேதிப்பொருட்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய உற்பத்தித்துறையின் வியத்தகு வளர்ச்சியும் தான்.
அதிவேகப் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதில் இந்தியாவின் நுகர்வு கலாச்சார முறைக்கும் பங்கு உண்டு.
கடந்த பல ஆண்டுகளில் இந்தியாவின் நுகர்வு கலாச்சார முறை பெருமளவில் மாற்றங்களை தந்திருக்கிறது.
இந்த மாற்றம் அதிக வளர்ச்சியை எட்டுவதற்கான இந்தியாவின் சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை வளத்திறனில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தத் திறன்கள் மீதான அழுத்தம் ஏற்கனவே பெருமளவில் அதிகரித்திருக்கிறது.
எனவே, அதிக மக்கள் தொகை அடர்த்தி, எளிதில் பாதிக்கப்படும் தன்மை கொண்ட சூழலியல், மிகமோசமான தட்பவெப்பநிலை, பொருளாதார வளர்ச்சிக்காக இயற்கை வளம் சார்ந்த சுற்றுச்சூழலின் நீடிக்க வல்லத்தன்மையை குறிப்பிடத்தக்க அளவில் சார்ந்திருப்பது ஆகியவை இந்தியாவின் நீடித்த வளர்ச்சிப் பாதையில் மிகப்பெரிய சவால்களாக விளங்கும். இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு, பொருளாதாரம் மற்றும் சமூக மேம்பாட்டிற்கான இலக்குகள் அனைத்தும் எல்லா நாடுகளாலும் வளர்ச்சியடைந்த அல்லது வளரும் நாடுகள்,
பொருளாதாரத்திற்கும் சுற்றுச்சூழலுக்கும் இடையே உள்ள தொடர்பு
- மனித வாழ்வினை சமூக, அரசியல், அறவியல், தத்துவ மற்றும் பொருளாதார அமைப்பு முறைகள் தீர்மானிக்கின்றன.
- மனிதன் இயற்கையில் உள்ள உயிரினங்கள் மற்றும் உயிரற்ற பொருட்களை தன் வாழ்வாதார தேவைக்காக சார்ந்து உள்ளான்.
- எனவே அவனது வாழ்க்கை முறை ஆனது சுற்றுச்சூழலால் பெருமளவிற்கு தீர்மானிக்கப்படுகிறது.
- பொருளாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் ஆகிய இரண்டிற்கும் இடையே உள்ள தொடர்பினை விளக்க ஆலன் நீஸ் மற்றும் ஆர்.வி. அய்யர்ஸ் ஆகிய இருவரும் ஒரு அணுகுமுறையினை கொண்டு வந்தனர்.
- அதற்கு பொருள் சார் சமநிலை அணுகுமுறை (Material Balance Approach) என்று பெயர்.
- பொருள் சார் சமநிலை அணுகுமுறை மாதிரியில் மொத்த பொருளியியல் செயல்பாடுகள் ஆனது உள்ளீடு, வெளியீடு முதலியனவற்றிற்கு இடையே உள்ள சமமான ஓட்டமாக கருதப்படுகிறது.