நீடித்த அல்லது வளம்குன்றா வளர்ச்சி முக்கியத்துவம் மற்றும் அதன்
நோக்கங்களை விளக்குக.
Answers
Answered by
0
Answer:
translate it into English and hindi
Answered by
1
நீடித்த நிலையான மேம்பாட்டு இலக்குகள்
- நீடித்த நிலையான வளர்ச்சி என்பது பொருளாதார வளர்ச்சி, சமூகச் சேர்ப்பு மற்றும் சுற்றுப்புறப் பாதுகாப்பு ஆகிய மூன்று முக்கிய இலக்குகளையும் சேர்ந்து சாதிப்பது என அழைக்கப்படுகிறது.
- ஐக்கிய நாடுகள் சபை (UNO) ஆனது 17 இலக்குகளைச் 2030 ஆம் ஆண்டிற்குள் சாதிக்க வேண்டும் என்பதற்கான மூன்று இணைந்து போகிற கொள்கைகளை நிறுவி உள்ளது.
- அவை முறையே உலகப் பொதுமை, ஒருங்கிணைப்பு மற்றும் மாற்றம் ஆகும்.
நோக்கங்கள்
- வறுமையற்ற நிலை, பட்டினியில்லா நிலை, சிறந்த உடல் நலம், தரமான கல்வி, பாலின சமத்துவம், தூய்மையான குடிநீர் மற்றும் துப்புரவு, தூய்மையான மற்றும் மலிவான ஆற்றல், நல்ல வேலை மற்றும் பொருளாதார வளர்ச்சி, தொழில், புத்தாக்கம், உள்கட்டமைப்பு, ஏற்றத்தாழ்வு குறைப்பு, நிலைத்த நகரங்கள் மற்றும் சமுதாயங்கள், பொறுப்பான நுகர்வு மற்றும் உற்பத்தி, தட்பவெப்பநிலை நடவடிக்கை, நீருக்கடியில் வாழ்க்கை, நிலப்பகுதியில் வாழ்க்கை, அமைதி மற்றும் நீதிக்கான வலிமையான நிறுவனங்கள், இலக்குகளை அடைவதில் கூட்டு முயற்சி முதலியன இதன் நோக்கங்கள் ஆகும்.
Similar questions