புற விளைவுகள் என்ற கருத்தினையும் அதன் வகைப்பாடுகளையும் விளக்குக
Answers
Answered by
0
புற விளைவுகள்
- அங்காடிக்கு வெளியே புற விளைவுகள் ஏற்படுகின்றன.
- இது நுகர்வு அல்லது உற்பத்தியில் ஈடுபட்டுள்ள மக்களை நேரடியான பாதிப்பது கிடையாது.
- இதனால் இவை சிதறிய விளைவுகள் என அழைக்கப்படுகின்றன.
நேர்மறை நுகர்ச்சிப் புறவிளைவு
- ஒருவரின் நுகர்ச்சிச் சார்பு மற்றொருவர் உடைய நுகர்ச்சிச் சார்பில் சாதகமான விளைவுகளை ஏற்படுத்துவது நேர்மறை நுகர்ச்சிப் புறவிளைவு ஆகும்.
எதிர்மறை நுகர்ச்சிப் புறவிளைவு
- ஒருவரின் நுகர்ச்சிச் சார்பு மற்றொருவர் உடைய நுகர்ச்சிச் சார்பில் பாதகமான விளைவுகளை ஏற்படுத்துவது எதிர்மறை நுகர்ச்சிப் புறவிளைவு ஆகும்.
நேர்மறை உற்பத்தி புறவிளைவு
- ஒருவரின் உற்பத்திச் சார்பு மற்றொருவர் உடைய உற்பத்திச் சார்பில் சாதகமான விளைவுகளை ஏற்படுத்துவது நேர்மறை உற்பத்தி புறவிளைவு ஆகும்.
எதிர்மறை உற்பத்தி புறவிளைவு
- ஒருவரின் உற்பத்திச் சார்பு மற்றொருவர் உடைய உற்பத்திச் சார்பில் பாதகமான விளைவுகளை ஏற்படுத்துவது எதிர்மறை உற்பத்தி புறவிளைவு ஆகும்.
Similar questions