எம். என் ராய் வழங்கியத் திட்டம்
கீழ்கண்டவைகளில் எது?
அ) காங்கிரஸ் திட்டம்
ஆ) மக்கள் திட்டம்
இ) பாம்பே திட்டம்
ஈ) இவை எதுவுமில்லை
Answers
Answered by
0
மக்கள் திட்டம்
பொருளாதார திட்டமிடல்
- தனியார் உற்பத்தி மற்றும் விநியோக நடவடிக்கை ஆகிய இரண்டையும் ஒன்றாக கட்டுப்படுத்துதல் அல்லது அவற்றை ஒடுக்குதலை குறிப்பதே பொருளாதார திட்டமிடல் என ராபின்ஸ் வரையறை செய்து உள்ளார்.
- இந்தியாவில் பொருளாதார திட்டமிடலின் பரிணாம வளர்ச்சியாக ஆறு திட்டங்கள் கருதப்படுகின்றன.
- அவை விஸ்வேசுவரய்யா திட்டம் (1934), ஜவஹர்லால் நேரு திட்டம் (1938), பாம்பே திட்டம் (1940), காந்தியத் திட்டம் (1944), மக்கள் திட்டம் (1945) மற்றும் சர்வோதயத் திட்டம் (1950) ஆகும்.
மக்கள் திட்டம்
- 1945 ஆம் ஆண்டு எம்.என்.ராய் என்பவர் மக்கள் திட்டம் என்ற திட்டத்தினை வடிவமைத்தார்.
- வேளாண்மை உற்பத்தி மற்றும் உற்பத்தி பொருட்களின் விற்பனையை இயந்திர மயமாக்குதல் மற்றும் நுகர்வுப் பொருட்களை அரசே விற்பனை செய்தலை வலியுறுத்தியது.
Similar questions