பொருளாதார முன்னேற்றத்தை நிர்ணயிக்கும் பொருளாதாரம் சாராத காரணிகள்
யாவை?
Answers
Answered by
1
Explanation:
பொருளாதார வளர்ச்சி மற்றும் சமூக வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் சில முக்கிய பொருளாதாரமற்ற காரணிகள்: கலாச்சாரம், மதம், குடும்பத்தின் பங்கு, வர்க்கம், பாரம்பரியம், தனிநபரின் பங்கு, சமூக மற்றும் அரசியல் சார்பு, அரசாங்கத்தின் பங்கு, மதம், மனித மூலதனத்தின் வளமாக மொழி, ஊழல், காரணிகள் ...
Answered by
1
பொருளாதார முன்னேற்றத்தை நிர்ணயிக்கும் பொருளாதாரம் சாராத காரணிகள்
மனித வளங்கள்
- மனித வளங்கள் மனித மூலதனங்கள் என அழைக்கப்படுகிறது.
- ஒரு நாட்டின் உற்பத்தி திறன் உடைய சொத்தாக, அந்த நாட்டின் கல்வி அறிவினையுடைய, உடல் நலம் கொண்ட மற்றும் திறமையான தொழிலாளர்கள் கருதப்படுகிறார்கள்.
- மனித மூலதன ஆக்கம் என்பது மக்களின் அறிவு, திறன்கள் மற்றும் உற்பத்தி செய்யும் தகுதி ஆகியவற்றை அதிகரிக்கும் செயல் ஆகும்.
தொழில் நுட்ப அறிவு
- புதிய தொழில் நுட்ப முறைகள் உற்பத்தி திறனை அதிகப்படுத்தி, பொருளாதாரம் முன்னேற்றத்தினை ஏற்படுத்தும் என ஜோசப் சும்பீட்டர் கூறுகிறார்.
அரசியல் சுதந்திரம்
- அரசியல் சுதந்திரம் மற்றும் பொருளாதார முன்னேற்றம் ஆகிய இரண்டும் நெருங்கிய தொடர்பு உடையவை ஆகும்.
- சமூக அமைப்பு, ஊழலற்ற அரசு நிர்வாகம், முன்னேற்றம் அடைவதற்கான விருப்பம், நீதி போதனை, அறநெறி மற்றும் சமூக மதிப்புகள், சூதாட்ட முதலாளித்துவம் மற்றும் பரம்பரை சொத்துரிமை முதலாளித்துவம் முதலியனவும் பொருளாதார முன்னேற்றத்தை நிர்ணயிக்கும் பொருளாதாரம் சாராத காரணிகள் ஆகும்.
Similar questions