உய்த்துணர் புள்ளியியல் என்றால் என்ன?
Answers
Answered by
4
Answer:
புள்ளியியல் அல்லது புள்ளிவிபரவியல் என்பது, தரவுகளைச் சேகரிப்பு, ஒழுங்கமைப்பு, பகுப்பாய்வு, விளக்கம் என்பன குறித்த பாடத்துறை ஆகும். கள ஆய்வுகள், சோதனைகள் என்பவற்றின் வடிவமைப்புத் தொடர்பிலான தரவுச் சேகரிப்புத் திட்டமிடல் உட்பட மேற்குறித்தவற்றில் எல்லா சிறப்புகளையும் இத்துறை கையாள்கிறது.
Answered by
0
உய்த்துணர்வு புள்ளியியல்
புள்ளியியல்
- எண்ணிலான விவரங்களை திரட்டி, ஒருங்கிணைத்து, வழங்கி, பகுத்தாய்ந்து, விவரிப்பதற்கு புள்ளியியல் என்று பெயர்.
- புள்ளியியல் இரு வகைகளாக பிரிக்கப்பட்டு உள்ளன.
- அவை முறையே விவரிப்பு புள்ளியியல் மற்றும் உய்த்துணர்வு புள்ளியியல் ஆகும்.
உய்த்துணர்வு புள்ளியியல் (Inferential Statistics)
- உய்த்துணர்வு புள்ளியியல் என்பது கூறுவின் (மாதிரி) விவரங்களை பகுத்தாய்வு செய்து அதன் பண்புகளை அறிந்து கொண்டு, அதன் மூலம் முழுத் தொகுப்பின் விவரங்களுக்கான பண்புகளை அறிந்து கொள்ளுதல் அல்லது உய்த்துணர்வதற்குப் பயன்படும் புள்ளியியலின் ஒரு பிரிவு ஆகும்.
- உய்த்துணர்வு புள்ளியியல் ஆனது கருது கோள்களை சோதனை செய்து கணிக்கின்றது.
- மாதிரிகளை தாண்டி முழுத் தொகுப்பினையும் அறிந்து கொள்ள உய்த்துணர்வு புள்ளியியல் பயன்படுகிறது.
Similar questions