கம்பெனியாருக்கும் கட்டபொம்மனுக்கும் இடையே சர்ச்சை ஏற்படக் காரணமாக விளங்கியது எது?
Answers
கம்பெனியுடனான கட்டபொம்மனின் சர்ச்சைக்கு காரணம்
- 1781 ஆம் ஆண்டு ஆங்கிலக் கிழக்கிந்திய கம்பெனியுடன், ஆற்காட்டு நவாப் உடன்படிக்கை ஏற்படுத்திக் கொண்டார்.
- அதன் அடிப்படையில் ஆற்காட்டு நவாப் மைசூரின் திப்பு சுல்தானுடன் போர் புரிந்து கொண்டிருந்த போது, ஆங்கிலக் கிழக்கிந்திய கம்பெனியின் முழுக்கட்டுப்பாட்டின் கீழ் கர்நாடகப் பகுதியின் வரி மேலாண்மை மற்றும் நிர்வாகம் செல்லும் நிலை ஏற்பட்டு உள்ளது.
- ஆங்கிலக் கிழக்கிந்திய கம்பெனியால் வசூலிக்கப்பட்ட வரியில் ஆறில் ஒரு பங்கு நவாப் மற்றும் அவர் குடும்ப பராமரிப்பிற்கு ஒதுக்கப்பட்டது.
- இவ்வாறு பஞ்சாலங்குறிச்சி பகுதியில் வரி வசூலிக்கும் உரிமையினை ஆங்கிலக் கிழக்கிந்திய கம்பெனி பெற்றது.
- ஆங்கிலக் கிழக்கிந்திய கம்பெனியின் வரி வசூலிக்கும் ஆட்சியாளர்கள் பாளையக்காரர்களை அவமானப்படுத்தியதோடு வரிகளை வசூலிக்க படையை பயன்படுத்தினர்.
- இந்த நிகழ்வே கம்பெனியுடனான கட்டபொம்மனின் சர்ச்சைக்கு காரணம் ஆகும்.
Explanation:
வீரபாண்டிய கட்டபொம்மன், தமிழகத்தில் ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்துப் போரிட்ட 18 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பாளையக்கார மன்னர் ஆவார். இவர் தெலுங்கு மொழி பேசும் ராஜகம்பளம் நாயக்கர் இனத்தில் பிறந்தவர். இவருடைய முன்னோர்கள் முகமதியர்களின் படையெடுப்புக்குப்பின்பு கம்பிளி ராஜ்ஜியம் இழந்து விஜயநகரம் உருவாக்கினர். பின் சோழ நாட்டிலும், பாண்டிய நாட்டிலும் வாழ்ந்து வந்தனர். பின்பு முகமதியர்கள் சேர, சோழ, பாண்டிய மன்னர்களின் மீது தாக்குதல் நடத்தி நாட்டை கைப்பற்றி 50 ஆண்டுகள் ஆட்சி நடத்தினர். பாண்டிய நாட்டில் கோவில்கள் இடிக்கப்பட்டன. மதுரை மீனாட்சியம்மன் கோவில் அடைக்கப்பட்டது. பாண்டிய நாட்டிலிருந்து உதவிகோரப்பட்டு, விஜயநகரப் பேரரசின் படைகள் வந்தபின், 3 நாடுகளும் மீண்டும் கைப்பற்றப்பட்டன. பின்பு பாஞ்சாலங்குறிச்சியை ஆண்ட பாண்டிய மன்னன், வீர பாண்டிய கட்ட பொம்மு முன்னோர்களின் வீரத்தைப் போற்றி பாஞ்சாலங்குறிச்சியைப் பரிசாக வழங்கினார்.