India Languages, asked by lollll4520, 10 months ago

கிலாபத் இயக்கம் பற்றி குறிப்பு வரைக

Answers

Answered by anjalin
2

கிலாபத் இயக்கம்

  • 1918‌ல்  முத‌ல் உலக‌ப்போ‌ர் முடி‌வி‌ற்கு வ‌ந்தது.
  • துரு‌‌க்‌கி‌யி‌ன் க‌லிபா எ‌ன்ற உலக‌ம் முழுவது‌ம் போ‌ற்ற‌ப்படு‌ம் இசுலா‌மிய மத‌த்தலைவ‌ர் கடுமையாக நட‌த்த‌ப்ப‌ட்டா‌ர்.
  • க‌லிபா‌‌வி‌ற்கு ஆதரவாக தோ‌ற்று‌வி‌க்க‌ப்‌ப‌ட்ட இயக்கமே கிலாபத் இயக்கம் என அழைக்கப்பட்டது.
  • கிலாபத் இயக்கம் ஆனது மௌலானா முகமது அலி மற்றும் மௌலானா சௌகத் அலி எ‌ன்ற அ‌லி சகோதர‌ர்க‌ளி‌ன் தலைமை‌யி‌‌ல் உருவா‌க்க‌ப்ப‌ட்டது.  
  • ‌கிலாப‌த்‌ இய‌க்க‌‌த்தினை இந்து முஸ்லிம்களை இணைக்க ஒரு வாய்ப்பாக எ‌ண்‌ணிய கா‌‌ந்‌தி ‌கிலாப‌த்‌ இய‌க்க‌த்‌தினை ஆத‌ரி‌த்தா‌ர்.  
  • 1919 ஆம் ஆண்டு நவம்பர் மாத‌த்‌தி‌ல் ‌டெல்‌லி‌யி‌ல்  நட‌ந்த அகில இந்திய கிலாபத் இயக்க மாநாட்டிற்கு கா‌ந்‌தியடிக‌ள் தலைமை தா‌ங்‌கினா‌ர்.
  • அல்லாஹூ அக்பர், வந்தே மாதரம், இந்து முஸ்லிம் வாழ்க ஆகிய மூன்று தேசிய முழக்கங்களை கூ‌றிய மௌலானா சௌகத் அலி‌‌யி‌ன் கரு‌த்துகளை கா‌ந்‌தி ஆத‌ரி‌த்தா‌ர்.  
Answered by Anonymous
0

Explanation:

கிலாபத் இயக்கம் அல்லது கிலாஃபட் இயக்கம் 1919-1924 காலகட்டத்தில் பிரித்தானிய இந்தியாவின் முசுலிம்களால் உதுமானிய கலீபகத்தைப் பாதுகாப்பதற்காக நடத்தப்பட்ட ஓர் இயக்கம். முதலாம் உலகப் போரில் ஜெர்மனிக்கு ஆதரவாகப் போரிட்ட உதுமானியக் கலீபகம், போரில் ஏற்பட்ட தோல்வியினால் அழியும் நிலைக்கு ஆளானது. வெற்றி பெற்ற நேச நாடுகள் உதுமானியக் கலீபகத்தைப் பிரிவினை செய்து கலீபாவின் அதிகாரத்தை அழிக்க முடிவு செய்தனர். கலீபாவினை தங்கள் சமய அதிகாரத்தின் சின்னமாகக் கருதிய உலக முசுலீம்களிடையே இது பலத்த எதிர்ப்பை ஏற்படுத்தியது. கலீபகத்தைப் பாதுகாக்க அலி சகோதரர்கள் என அழைக்கப்பட்ட முகமது அலி மற்றும் சௌகத் அலி ஆகியோர் 1919ம் ஆண்டு இந்தியாவில் கிலாபத் இயக்கத்தைத் தொடங்கினர்.

Similar questions