பகத் சிங் பற்றி குறிப்பு வரைக.
Answers
Answered by
0
பகத் சிங்
- பஞ்சாபில் இந்துஸ்தான் குடியரசு ராணுவம் மீண்டும் பகத்சிங், சுக்தேவ் மற்றும் அவர்களது தோழர்களால் உருவாக்கப்பட்டது.
- பொது உடைமைக் கருத்துகளினால் ஈர்க்கப்பட்ட பகத்சிங், சுக்தேவ் மற்றும் அவர்களது தோழர்கள் இந்துஸ்தான் குடியரசு ராணுவத்தை 1928 ஆம் ஆண்டு இந்துஸ்தான் சமதர்மவாத குடியரசு அமைப்பு என்று பெயர் மாற்றம் செய்தனர்.
- 1929 ஆம் ஆண்டு பகத்சிங்கும் B.K. தத்தும் மத்திய சட்டப் பேரவையில் ஒரு புகைக்குண்டினை வீசினர்.
- மேலும் துண்டுப் பிரசுரங்களை வீசிய இருவரும் இன்குலாப் ஜிந்தாபாத் மற்றும் பாட்டாளி வர்க்கம் வா என்ற இரு முழக்கங்களை எழுப்பினர்.
- இதன் காரணமாக இராஜ குருவும், பகத்சிங்கும் கைது செய்யப்பட்டு மரணத் தண்டனை விதிக்கப்பட்டனர்.
- பகத் சிங்கின் அசாத்திய துணிச்சல் இளைஞர்களிடையே விடுதலை உணர்வினை தூண்டியது.
Similar questions