கட்டபொம்மன் _________ என்ற இடத்தில் தூக்கிலிடப்பட்டார்.
Answers
Answered by
1
கயத்தாறின் பழைய கோட்டை
- ஆங்கிலேய படைகளுக்கும் பாளையக்காரர்களுக்கும் கள்ளர்பட்டியில் நடந்த மோதலின் போது வீரபாண்டிய கட்டபொம்மன் தப்பி புதுக்கோட்டைக்குச் சென்றார்.
- ஆனால் சிவ சுப்ரமணியனார் கைது செய்யப்பட்டார்.
- ஆங்கிலேய அதிகாரிகள் வீரபாண்டிய கட்டபொம்மனின் தலைக்கு ஒரு வெகுமதியை நிர்ணயித்தனர்.
- இதன் காரணமாக எட்டையபுரம் மற்றும் புதுக்கோட்டை அரசர்களால் காட்டிக் கொடுக்கப்பட்ட கட்டபொம்மன் இறுதியாக பிடிபட்டார்.
- அவரின் அமைச்சர் சிவசுப்ரமணியனார் நாகலாபுரம் என்ற இடத்தில் 1799 ஆம் ஆண்டு செப்டம்பர் 13ல் தூக்கிலிடப்பட்டார்.
- அக்டோபர் 16ல் மேஜர் பானெர்மென் கட்டபொம்மனை விசாரணை செய்தபோது, தன் மீது சுமத்தப்பட்ட அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் கட்டபொம்மன் ஏற்றுக்கொண்டார்.
- சகப் பாளையக்காரர்களின் முன்னிலையில் திருநெல்வேலிக்கு அருகில் உள்ள கயத்தாறின் பழைய கோட்டையின் முன்பு இருந்த புளியமரத்தில் கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்டார்.
Similar questions