கவிதையின் நடையைக் கட்டமைக்கும் அழகியல் கூறுகளை எடுத்துக்காட்டி விளக்குக.
Answers
Answered by
30
Answer:
hiii bro
please mark as brainliest
Answered by
71
கவிதையின் நடையைக் கட்டமைக்கும் அழகியல் கூறுகள்
- தொல்காப்பியம் அழகியலை உருவாக்குவதற்குத் தேவையான தளத்தினை அமைத்துத் தருகின்றது.
- இது எழுத்து மற்றும் சொல்லை போலவே செய்யுளையும் ஒரு உள்ளமைப்பாகவே கருதுகின்றது.
மொழிசார் கலை
- உவமை, உருவகம், உள்ளுறை, இறைச்சி முதலியன மொழியின் வழக்குகளைக் கலையியல் வழக்கமாக மாற்றுகின்றன.
கவிதையின் நடையியல் கூறுகள்
- பாட்டு அல்லது கவிதையின் நடையியல் கூறுகளில் ஒலிக் கோலங்களும், சொற்களின் புலமும், தொடரியல் போக்குகளும் மிக முக்கியமானவை ஆகும்.
ஒலிக்கோலங்கள்
- சமிக்ஞை மற்றும் இசையில் இருந்து தான் எந்த ஒரு தொன்மையான மொழியும் தொடங்குகிறது.
(எ.கா)
- கடந்தடு தானை மூவிருங் கூடி உடன்றனிர்ஆயினும் பறம்பு கொளற்கரிதே
- மேலே உள்ள வரிகளில் க, த, ட, ற என்ற வல்லின மெய்களில் உணர்ச்சியின் ஒலிக்கோலம் காணப்படுகிறது.
(எ.கா)
- படாஅம் ஈத்த கெடாஅ நல்லிசைக் கடாஅயானைக் கலிமான் பேக
- சொற்களின் இடையில் அமைந்துள்ள உயிர் நெடில் எழுத்துக்கள், செய்யுளில் ஓசை நயத்தினை ஏற்படுத்த நீண்டு ஒலிக்கின்றன.
சொற்புலமும், தொடரியல் போக்குகளும்
- சொல் வளத்தில் உணர்வும் பொருளும், கலையும் பண்பாடும், வரலாறு அரசியலும் பொதிந்து உள்ளது.
- முல்லைக்கலியில் காளைகளின் இனம் பற்றிய சொற்களும், கிடை என்ற குறுநாவலில் ஆடுகளின் அடையாளங்களும் பல பெயர்களில் காணப்படுகிறது.
- தமிழ் அழகியல் நடையைக் கட்டமைப்பதற்குச் சங்க இலக்கியமே முதன்மை ஆதாரமாக உள்ளது.
Similar questions