உயர்திணை என்மனார் மக்கட் சுட்டே அஃறிணை என்மனார் அவரல பிறவே” – இந்நூற்பா இடம்பெற்ற இலக்கண நூல் ______ அ) நன்னூல் ஆ) அகத்தியம் இ) தொல்காப்பியம் ஈ) இலக்கண விளக்கம்
Answers
Answered by
4
தொல்காப்பியம்
- தமிழில் பொருட்குறிப்பினை அடிப்படையாக கொண்டு திணைப் பாகுபாடு உயர்திணை, அஃறிணை என இரண்டாக பிரிக்கப்பட்டு உள்ளது.
- உயர்திணை என்மனார் மக்கட் சுட்டே அஃறிணை என்மனார் அவரல பிறவே (தொல். சொல். 1)
- மக்கள் என்று சுட்டப்படுவோர் உயர்திணை.
- அவரல்லாத பிற அஃறிணை என மேற்கண்ட வரிகள் மூலம் தொல்காப்பியம் கூறுகிறது.
- இந்த பாகுபாடு ஆங்கிலம் போன்ற மொழிகளில் இல்லை.
- யார்? எது? முதலிய வினாச் சொற்களை பயனிலையாக கொண்டு திணை வேறுபாடு அறியப்படுகிறது.
- அங்கே நடப்பது யார்? அங்கே நடப்பது எது? என்ற தொடர்கள் பொருட்குறிப்பின் அடிப்படையில் யார் என்ற பயனிலை உயர்திணையையும், எது என்ற பயனிலை அஃறிணையையும் குறிக்கிறது.
Answered by
1
Answer:
தொல்காப்பியம்
Explanation:
அஃறினைஏபழேஜைபேஜ
Similar questions