குகனோடு ஐவராகி, வீடணனோடு எழுவரான நிகழ்வுகளைச் சுட்டிக் காட்டுக.
Answers
Answered by
17
குகனோடு ஐவராகி, வீடணனோடு எழுவரான நிகழ்வு
- இராமன் தன் சகோதர்களான இலக்குவன், பரதன், சத்ருகன் ஆகியோருடன் சேர்ந்து நால்வராக இருந்தான்.
- இராமன் கங்கை கரையினை கடக்க குகன் என்ற வேடவன் உதவினான்.
- இராமன் காட்டிற்கு சென்று துன்பம் அடைவான் என எண்ணிய குகன் மனம் வருந்தினான்.
- இதனை அறிந்த இராமன் நாம் இருவரும் பிரிவதை எண்ணி மனம் வருந்தாதே.
- இதுவரை சகோதரர்களாக நாங்கள் நால்வர் இருந்தோம்.
- இனி உன்னையும் சேர்த்து நாம் ஐவராக உள்ளோம் என்றான்.
- அதன் பிறகு கிட்கிந்தையில் அனுமன் அழைத்து வந்த சுக்ரீவனிடம் உன் பகைவர் என் பகைவர், உன் நண்பர் என் நண்பர் உன் உறவினர் என் உறவினர் எனக் கூறி சுக்ரீவனை தன் சகோதரனாக இராமன் ஏற்றான்.
- பின்னர் சீதை கவர்ந்தது தவறு எனக்கூறியதை எதிர்த்த தன் சகோதரான இராவணனை வெறுத்து இராமனிடம் அடைக்கலம் வந்த வீடணிடனை இராமன் தன் சகோதரனாக ஏற்றுக்கொண்டான்.
- இதுவே குகனோடு ஐவராகி, வீடணனோடு எழுவரான நிகழ்வு ஆகும்.
Similar questions