பண்பின் படிமமாகப் படைக்கப்பட்ட இராமன், பிற உயிர்களுடன் கொண்டிருந்த உறவு நிலையைப் பாடப்பகுதி வழி நிறுவுக
Answers
Answered by
20
பண்பின் படிமமாகப் படைக்கப்பட்ட இராமன், பிற உயிர்களுடன் கொண்டிருந்த உறவு நிலை
குகன்
- இராமன் காட்டிற்கு சென்று துன்பம் அடைவான் என எண்ணிய குகன் மனம் வருந்தினான்.
- இதனை அறிந்த இராமன் கூறிய கூற்றே துன்பு உளது எனின் அன்றோ சுகம் உளது ஆகும்.
- அதாவது துன்பம் என்ற ஒன்று இருந்தால் மட்டுமே இன்பம் என்ற ஒன்று கிடைக்கும்.
- துன்பத்திற்கு பிறகு நிச்சயம் இன்பம் கிடைக்கும்.
- நாம் இருவரும் பிரிவதை எண்ணி மனம் வருந்தாதே.
- இதுவரை சகோதரர்களாக நாங்கள் நால்வர் இருந்தோம்.
- இனி உன்னையும் சேர்த்து நாம் ஐவராக உள்ளோம் என்றான்.
சடாயு
- சீதையை கவர்ந்து சென்ற இராவணணை எதிர்த்து கழுகு வேந்தனான சடாயு போரிட்டு காயமுற்றான்.
- இராமன் சடாயுவை இறக்கும் தருவாயில் சந்தித்தான்.
- நடந்ததை இராமனிடம் கூறிவிட்ட பிறகு சடாயு இறந்தான்.
- சடாயுவை தன் தந்தைக்கு நிகராக எண்ணிய இராமன், மகன் என்ற முறையில் இறுதி சடங்குகளை செய்தான்.
சவரி
- இராமனிடம் மிகுதியான அன்பையும், பக்தியையும் உடையவளாக சவரி திகழ்ந்தாள்.
- சீதையை தேடி இராமன் அலைந்த போது இராமனை சுக்ரீவனுடன் நட்புக் கொள்ளுமாறு செய்தவள் சவரி ஆகும்.
- இராமனைக் கண்டதால் தன் பொய்யான உலகப்பற்று அழிந்தது எனவும், அளவற்ற காலம் தான் மேற்கொண்டு இருந்த தவம் பலித்து பிறவி ஒழிந்தது எனவும் கூறி நிலையாமை குறித்தக் கருத்தை சவரி வெளிப்படுத்தினாள்.
சுக்ரீவன்
- கிட்கிந்தையில் அனுமன் அழைத்து வந்த சுக்ரீவனிடம் உன் பகைவர் என் பகைவர், உன் நண்பர் என் நண்பர் உன் உறவினர் என் உறவினர் எனக் கூறி சுக்ரீவனை தன் சகோதரனாக இராமன் ஏற்றான்.
வீடணன்
- சீதை கவர்ந்தது தவறு எனக்கூறியதை எதிர்த்த தன் சகோதரான இராவணனை வெறுத்து இராமனிடம் அடைக்கலம் வந்த வீடணனை இராமன் தன் சகோதரனாக ஏற்றுக்கொண்டான்.
Similar questions