உள்ளொன்று வைத்துப் புறம்பொன்று பேசுவார் – இத்தொடர் உணர்த்தும் பண்பு அ) நேர்மறைப் பண்பு ஆ) எதிர்மறைப் பண்பு இ) முரண்பண்பு ஈ) இவை அனைத்தும்
Answers
Answered by
2
முரண் பண்பு
இராமலிங்க அடிகள்
- பசிப்பிணி போக்கப் பாடுபட்டவரும், சமரச சன்மார்க்க நெறிகளை வகுத்தவரும் ஆன இராமலிங்க அடிகள் அவர்கள் சிதம்பரத்தினை அடுத்துள்ள மருதூரில் பிறந்தார்.
- இவர் சிறு வயதிலேயே கவிபாடும் திறன் உடையவராக திகழ்ந்தார்.
- எல்லா உயிர்களின் மீதும் அன்பு செலுத்திய இராமலிங்க அடிகள் அவர்களின் வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன் என்ற வரிகளின் மூலம் தன் ஜீவகாருண்யத்தினை வெளிப்படுத்தினார்.
- இவரின் உரைநடை நூல்கள் மனுமுறை கண்ட வாசகம் மற்றும் ஜீவகாருண்ய ஒழுக்கம் ஆகும்.
- இவர் எழுதிய திருவருட்பாவில் இடம்பெற்றுள்ள தெய்வமணிமாலை என்னும் பாமாலையில் உள்ள உள்ளொன்று வைத்துப் புறம்பொன்று பேசுவார் என்ற தொடர் உணர்த்தும் பண்பு முரண் பண்பு ஆகும்.
Similar questions