ஒவ்வொரு நகரத்துக்கும் வரலாறும் வடிவழகும் உண்டு” – நீங்கள் பார்த்த அல்லது வாழ்ந்த ஒரு நகரம் குறித்து எழுதுக.
Answers
Explanation:
குறிப்புகள்:
இவ்வினாத்தாள் ஐந்து பகுதிகளைக் கொண்டது. அனைத்து பகுதிகளுக்கும் விடையளிக்க வேண்டும். தேவையான இடங்களில் உள் தேர்வு வினாக்கள் கொடுக்கப்பட்டுள்ளது.
பகுதி I, II, III, IV மற்றும் Vல் உள்ள அனைத்து வினாக்களுக்கும் தனித்தனியே விடையளிக்க வேண்டும்.
வினா எண் 1 முதல் 14 வரை பகுதி-1ல் தேர்வு செய்யும் வினாக்கள் தரப்பட்டுள்ளன.
ஒவ்வொரு வினாவிற்கும் ஒரு மதிப்பெண். சரியான விடையைத் தேர்ந்தெடுத்துக் குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதவும்.
வினா எண் 15 முதல் 30 வரை பகுதி-பால் இரண்டு மதிப்பெண் வினாக்கள் தரப்பட்டுள்ளன. –
வினா எண் 31 முதல் 43 வரை பகுதி-IIIல் நான்கு மதிப்பெண் வினாக்கள் தரப்பட்டுள்ளன.
வினா எண் 44 முதல் 46 வரை பகுதி-IVல் ஆறு மதிப்பெண் வினாக்கள் தரப்பட்டுள்ளன.அனைத்து வினாவிற்கும் விடையளிக்கவும்.
வினா எண் 47-ல் பகுதி-Vல் மனப்பாடப்பகுதி தரப்பட்டுள்ளன.
திருவண்ணாமலை நகரம்
- தமிழகத்தின் நான்காவது பெரிய மாவட்டமாகவும், தீப நகரமாகவும் விளங்கும் திருவண்ணாமலை வரலாற்று சிறப்பு மிக்க ஒரு ஆன்மீக தலம் ஆகும்.
- இங்கு 3 வருவாய் கோட்டங்களும், 12 வட்டங்களும் உள்ளன.
- திருவண்ணாமலை மாவட்டம் ஆனது கல்வராயன் மற்றும் ஜவ்வாது மலைப் பகுதியின் கிழக்குப்பகுதியில் தென் வடக்காக நீண்ட பரப்பில் அமைந்துள்ளது.
- திருவண்ணாமலை மாவட்டத்தின் பல பகுதிகளில் பழங்கால வரலாற்று சின்னங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
- ஆன்மீக நகரமாக விளங்கும் திருவண்ணாமலையில் அருணாகிரிநாதர், அப்பைய தீட்சிதர், சைவ எல்லப்ப நாவலர், சமண துறவிகள் முதலியோர் அவதரித்தனர்.
- இங்கு இரமணர், யோகிராம் சுரத் குமார், சேஷாத்திரி அடிகளார் முதலிய ஆன்மீகவாதிகளும் வாழ்ந்தனர்.
- முன்னோரு காலத்தில் பிரமனுக்கும், விஷ்ணுவிற்கும் யார் பெரியவர் என்ற போட்டியின் காரணமாக சிவன் நெருப்பு பிழம்பாக நின்று அடிமுடி காட்டாமல் விளங்கினார்.
- இதுவே தற்போது திருவண்ணாமலையில் உள்ள மலையாக திகழ்கிறது.
- இதனை நினைவில் கொள்ளும் வகையிலே கார்த்திகை மாதத்தில் உலகப் புகழ்பெற்ற தீப திருவிழா நடைபெறுகிறது.
- இந்த மலையினை தொலைவிலிருந்து பார்த்தால் தெரியும் நந்தி உருவமும், இறைவன் படுத்திருப்பது போன்ற உருவமும் கொண்ட பாறைகள் இயற்கையாக அமைந்துள்ளன.
- பெளர்ணமி தோறும் நடைபெறும் கிரிவலத்தினை முதன்முதலில் செய்தவரே பார்வதி தாயாராம்.
- இவர் கிரிவலம் செய்ததன் பலனாகவே இறைவன் தன் சினம் தணிந்து தன் இடப்பாகத்தினை பார்வதிக்கு தந்து அர்த்தநாரிஸ்வராக காட்சி தருகிறார்.
- சிவனின் பஞ்சபூத தலங்களில் அக்னித் தலமாக உள்ள திருவண்ணாமலை கோயில் விஜயநகர பேரரசு ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டது.
- மேலும் இந்த நகரானது பல்லவர்கள், சோழர்கள், பாண்டியர்கள், ஹோய்சாலர்கள், சம்புவராயர்கள் மற்றும் ஆங்கிலேயர்களால் ஆட்சி ஆளப்பட்டது.
- 1989 ஆம் ஆண்டு வட ஆற்காடு மாவட்டத்தினை பிரித்து திருவண்ணாமலை சம்புவராயர் மாவட்டம் என்ற புதிய மாவட்டம் உருவானது.
- இதுவே 1997 ஆம் ஆண்டு திருவண்ணாமலை மாவட்டம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
- தற்போது திருவண்ணாமலையில் அரசு மருத்துவக் கல்லூரியும், ஆரணியில் அரசு பொறியியல் கல்லூரியும், திருவண்ணாமலை, செய்யார், தென்னாங்கூரில் அரசு கலைக் கல்லூரியும், காரப்பட்டில் அரசு பாலிடெக்னிக் கல்லூரியும், பல தனியார் கல்லூரிகளும் உள்ளன.
- தற்போது அரசு சட்டக் கல்லூரி அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.
- தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே உள்ள சாத்தனூர் அணை ஆனது சுற்றுலாத் தலமாகவும், அப்போதைய சினிமா படப்பிடிப்பு தலமாகவும் விளங்கியது.
- இவ்வாறு திருவண்ணாமலை மாவட்டம் வரலாற்று சிறப்புகளையும், ஆன்மீக சிறப்புகளையும் உடைய நகரமாக திகழ்கிறது.