நைட்ரஜன் வளிமண்டலத்தில் அதிகம் இருந்தாலும் தாவரங்கள் அதனைப் பயன்படுத்த முடிவதில்லை, ஏன்?
Answers
Answered by
0
நைட்ரஜன் வளி மண்டலத்தில் அதிகம் இருந்தாலும் தாவரங்கள் அதனைப் பயன்படுத்த முடியாததன் காரணம்
- நைட்ரஜன் வளி மண்டலத்தில் அதிகம் இருந்தாலும் தாவரங்கள் அதனைப் பயன்படுத்த முடிவதில்லை.
- வளி மண்டலத்தில் உள்ள மொத்த வாயுக்களில் நைட்ரஜன் வாயுவின் அளவு 75 % ஆகும்.
- தாவரங்களால் ஆக்சிஜன், கார்பன் டை ஆக்சைடு போன்ற வாயுக்களை போல நைட்ரஜனை நேரடியாக பயன்படுத்த இயலவில்லை.
- தாவரங்கள் நைட்ரஜனை நைட்ரேட், நைட்ரைட் மற்றும் அம்மோனியா போன்ற வடிவில் இருந்து எடுத்துக் கொள்கின்றன.
- சில பாக்டீரியாக்கள் மற்றும் நீலப் பசும் பாசிகள் நைட்ரஜனை நைட்ரேட், நைட்ரைட் மற்றும் அம்மோனியா போன்ற வடிவில் மாற்றி பிறகே தாவரங்களால் நைட்ரஜனை பயன்படுத்த முடிகிறது.
Similar questions