மார்புக்கூட்டை உருவாக்கும் விலா எலும்புகளின் வகைகள் யாவை?
Answers
Answered by
1
Answer:
can you please tell me what you had written so we could tell you in English and you convert them in that language
Answered by
0
மார்புக்கூட்டை உருவாக்கும் விலா எலும்புகளின் வகைகள்
உண்மை விலா எலும்புகள்
- மொத்தம் 12 இணை விலா எலும்புகள் உள்ளன.
- இதில் முதல் 7 இணை விலா எலும்புகள் ஆனது உண்மை விலா எலும்புகள் அல்லது முள்ளெலும்புகள் விலா எலும்புகள் ஆகும்.
- இவை முதுகுப்புறத்தில் முதுகெலும்புத் தொடரின் மார்பு முள்ளெலும்புகளுடனும் வயிற்றுப் புறத்தில் மார்பெலும்புடன்னும் ஹையலின் குருத்தெலும்பால் இணைக்கப்பட்டுள்ளன.
போலி விலா எலும்புகள்
- 8, 9, 10 ஆவது இணை விலா எலும்புகள் நேரடியாக மார்பெலும்புடன் இணையாமல் 7வது விலா எலும்பின் ஹையலின் குருத்தெலும்போடு இணைந்து உள்ளது.
- இதற்கு போலி விலா எலும்புகள் என்று பெயர்.
மிதக்கும் விலா எலும்புகள்
- கடைசி இரு இணைகள் (11, 12) வயிற்றுப் பகுதியில் மார்பெலும்புடன் இணையாமல் உள்ளதால் இவை மிதக்கும் விலா எலும்புகள் என அழைக்கப்படுகின்றன.
Attachments:
Similar questions