வளர்ச்சி ஹார்மோன் இயல்பான உடல் வளர்ச்சிக்கு முக்கியமானது. இக்கூற்றை நியாயப்படுத்தவும்.
Answers
Answered by
0
வளர்ச்சி ஹார்மோன்
- அனைத்துத் திசுக்களின் வளர்ச்சி மற்றும் வளர்சிதை மாற்ற செயல்களை வளர்ச்சி ஹார்மோன் ஆனது மேம்படுத்துகின்றது.
- வளர்ச்சி ஹார்மோன் ஆனது கார்போஹைட்ரேட், புரதம் மற்றும் கொழுப்பு வளர்சிதை மாற்றத்தில் தாக்கத்தினை ஏற்படுத்துவதுடன் செல்களில் புரத உற்பத்தி விகிதத்தினை உயர்த்துகின்றது.
- இது நைட்ரஜன், பொட்டாசியம், பாஸ்பரஸ், சோடியம் முதலிய தாது உப்புகளை உடலில் நிறுத்திக் கொள்ளுதல், குருத்தெலும்பு உருவாக்கம் மற்றும் எலும்பு உருவாக்கத்தினை தூண்டுதலில் ஈடுபடுகின்றது.
- அடிப்போஸ் திசுக்களில் உள்ள கொழுப்பு அமிலங்களை விடுவித்துச் செல்களின் ஆற்றல் தேவைக்கான குளுக்கோஸ் பயன்பாட்டு வீதத்தினை குறைக்கின்றது.
- குளுக்கோசை நம்பியுள்ள மூளை முதலிய திசுக்களுக்காக அதை சேமிக்கின்றது.
- இவ்வாறு இயல்பான உடல் வளர்ச்சிக்கு முக்கியமானதாக வளர்ச்சி ஹார்மோன் உள்ளது.
Answered by
0
Answer:
Which language is this please translate in hindi or English .
Similar questions