"குப்தர்கள் காலத்து வரலாற்றினை மீள் உருவாக்கம் செய்ய உதவும் சான்றுகள் யாவை? "
Answers
Answered by
0
Explanation:
ask it in Hindi or English
Answered by
0
குப்தர்கள் காலத்து வரலாற்றினை மீள் உருவாக்கம் செய்ய உதவும் சான்றுகள்
இலக்கியச் சான்றுகள்
- இரண்டாம் சந்திரகுப்தர் காலத்தில் இந்தியா வந்த சீனப் பயணி பாஹியான் குறிப்புகள், காளிதாசரின் படைப்புகள், சமண, பெளத்த இலக்கியங்கள், காமந்தகாரின் நீதிசாரம் என்ற தரும சாத்திரம். விசாகதத்தரின் தேவி சந்திரகுப்தம், முத்ரா ராட்சசம் முதலிய நூல்கள் குப்தர்களின் எழுச்சி குறித்த விவரங்களை அளிக்கின்றன.
கல்வெட்டு சான்றுகள்
- முதலாம் சந்திரகுப்தரின் சாதனைகளை மெக்ராேலி இரும்புத் தூண் கல்வெட்டு குறிக்கிறது.
- அலகாபாத் தூண் கல்வெட்டுகள் சமுத்திர குப்தரின் ஆட்சி, ஆளுமை மற்றும் சாதனைகளை குறிக்கின்றன.
- இந்த கல்வெட்டினை பொறித்தவர் ஹரிசேனர் ஆவார்.
- இந்த கல்வெட்டு ஆனது 33 வரிகளில் நாகரி வரிவடிவத்தில் சமஸ்கிருத மொழியில் எழுதப்பட்டு உள்ளது.
நாணயச் சான்றுகள்
- குப்த அரசர்கள் வெளியிட்ட நாணயங்களில் அரசர்களின் உருவங்கள் பொறிக்கப்பட்டு உள்ளன.
- குப்த அரசர்களின் பட்டங்கள் மற்றும் அவர்கள் நடத்திய வேதச் சடங்குகள் குறித்து இந்த தங்க நாணயங்கள் கூறுகின்றன.
Attachments:
Similar questions