வளவன் தேர்வு எழுதினான் பிறவினை ஆக்கு
Answers
1.2 வினை வகைகள்
வினைச்சொற்கள் முற்று, எச்சம் என்பதாக மட்டுமன்றி, அவை பயன்படுவதன் அடிப்படையில் பலவாகப் பகுத்துரைக்கப்படுகின்றன. அவ்வகையில்,
தன்வினை, பிறவினை;
செய்வினை, செயப்பாட்டுவினை;
உடன்பாட்டுவினை, எதிர்மறைவினை
என்பன போன்ற பல வகைப்பாடுகள் உள்ளன.
1.2.1 தன்வினை, பிறவினை
தன்வினை என்பது ஒருவர் தானே செய்வது. பிறவினை என்பது பிறரைச் செய்யும்படி ஆக்குவது.
கரையைச் சேர்வான்
என்னும் தொடரில், சேர்தலாகிய தொழிலை ஒருவன் செய்வான் என்பது பொருள்.
கரையில் சேர்ப்பான்
என்பது சொல்லாயின், வேறு யாரையோ அல்லது எதையோ சேரும்படி இவன் செய்வான் என்பது பொருளாகும், முன்னதில் சேரும் வினை இவனுடையது. பின்னதில் அவ்வினை வேறு ஒரு பொருளுக்கு உரியது.
சேர்வான் என்பது தன்வினையாகிறது.
சேர்ப்பான் என்பது பிறவினை ஆகிறது.
தன்வினை - பிறவினை
வருந்துவான் - வருத்துவான் இவற்றில் மெல்லொற்று (ந்,ங்) வல்லொற்றாகிப் (த்,க்) பிறவினை ஆயிற்று.
திருந்தினான் - திருத்தினான்
அடங்கினான் - அடக்கினான்
ஆடினான் - ஆட்டினான் இவற்றில் வல்லொற்று (ட்,ற்) இரட்டித்துப் (ட்ட், ற்ற்) பிறவினை ஆயிற்று.
மாறுவான் - மாற்றுவான்
பிறவினையாகும்போது வி, பி ஆகிய விகுதிகளில் ஒன்று, சேர்ந்து வருவதும் உண்டு.
நட - நடப்பி - நடப்பித்தான்
செய் - செய்வி - செய்வித்தான்
என்பனபோல வரும். சொல் வடிவை விட, அது உணர்த்தும் பொருளை வைத்தே தன்வினையா, பிறவினையா என அறிதல் வேண்டும்.
இனி, செய்வினை, செயப்பாட்டுவினை என்னும் வினைப் பகுப்பினைப் பார்ப்போம்.
hope it helps you.
follow me
Please mark me as brain-list