செந்தமிழ் நாடு பாரதியார் பாடல் மற்றும் விளக்கம்
Answers
Answer:
செந்தமிழ் நாடு- பாடல்
செந்தமிழ் நாடெனும் போதினிலே – இன்பத்
தேன் வந்து பாயுது காதினிலே – எங்கள்
தந்தையர் நாடென்ற பேச்சினிலே – ஒரு
சக்தி பிறக்குது மூச்சினிலே
காவிரி தென்பெண்ணை பாலாறு – தமிழ்
கண்டதோர் வையை பொருனை நதி – என
மேவிய யாறு பலவோடத் – திரு
மேனி செழித்த தமிழ்நாடு
வேதம் நிறைந்த தமிழ்நாடு – உயர்
வீரம் செறிந்த தமிழ்நாடு – நல்ல
காதல் புரியும் அரம்பையர் போல் – இளங்
கன்னியர் சூழ்ந்த தமிழ்நாடு
முத்தமிழ் மாமுனி நீள்வரையே – நின்று
மொய்ம்புறக் காக்குந் தமிழ்நாடு – செல்வம்
எத்தனையுண்டு புவிமீதே – அவை
யாவும் படைத்த தமிழ்நாடு
நீலத் திரைக்கட லோரத்திலே – நின்று
நித்தம் தவஞ்செய் குமரிஎல்லை -வட
மாலவன் குன்றம் இவற்றிடையே – புகழ்
மண்டிக் கிடக்குந் தமிழ்நாடு
கல்வி சிறந்த தமிழ்நாடு – புகழ்க்
கம்பன் பிறந்த தமிழ்நாடு – நல்ல
பல்விதமாயின சாத்திரத்தின் – மணம்
பாரெங்கும் வீசுந் தமிழ்நாடு
வள்ளுவன் தன்னை உலகினுக்கே – தந்து
வான்புகழ் கொண்ட தமிழ்நாடு – நெஞ்சை
அள்ளும் சிலப்பதி காரமென்றோர் – மணி
யாரம் படைத்த தமிழ்நாடு
சிங்களம் புட்பகம் சாவக – மாதிய
தீவு பலவினுஞ் சென்றேறி – அங்கு
தங்கள் புலிக்கொடி மீன்கொடியும் – நின்று
சால்புறக் கண்டவர் தாய்நாடு
விண்ணை யிடிக்கும் தலையிமயம் – எனும்
வெற்பை யடிக்கும் திறனுடையார் – சமர்
பண்ணிக் கலிங்கத் திருள்கெடுத்தார் – தமிழ்ப்
பார்த்திவர் நின்ற தமிழ்நாடு
சீன மிசிரம் யவனரகம் – இன்னும்
தேசம் பலவும் புகழ்வீசிக் – கலை
ஞானம் படைத் தொழில் வாணிபமும் – மிக
நன்று வளர்த்த தமிழ்நாடு
செந்தமிழ் நாடு- பாடல் விளக்கம்
பாரதி, தமிழ் மீது கொண்ட காதலில் எழுதிய பாடலை பார்த்தோம். அதற்க்கு உண்டான உண்மையான விளக்கம் தெரிந்தால் நமக்கும் தமிழ் மீது உள்ள காதல் பற்று அதிகரிக்கும்.
செந்தமிழ்
♥ என்று சொல்லும் போதே தமிழ் ஒரு இனிமையான மொழி என்றும் செந்தமிழ் நாடு என்பதன் மூலம் தமிழ்நாடு அணைத்து வளங்களையும் கொண்ட சிறப்பான நாடு
என்றும் நமக்கே தெரிகிறது. மண், மலை, கடல், இயற்க்கை வளம் கொண்ட நம் நாடு காவிரி, தென்பண்ணை, பாலாறு, வைகை போன்ற ஆறுகளுக்கு ஆதாரமாக இருக்கிறது.
கல்வி
என்று எடுத்துக்கொண்டால், ஆதியில் இருந்து திருவள்ளுவர் முதல் கம்பன் வரை பெண்களில் ஔவையார் முதல் காக்கைப் பாடினியார் வரை அவ்வளவு ஏன் இன்றும் கூகிள் சுந்தர் பிச்சை முதல் இஸ்ரோ சிவன் வரை அனைவரும் கல்வியில் சிறப்பு வாய்ந்தவர்கள்.
உலக
அளவில் தமிழின் பெருமையை வள்ளுவர் உணர்த்தியுள்ளார். உலகில் உள்ள நூல்கள்
, பாடல்கள்
அனைத்துமே சமய சார்புடையது. ஆனால் நமது வள்ளுவன் இயற்றிய குரல்கள் எந்த சார்பும் இல்லாமல் தனித்து விளங்கியதால் உலக புகழ் பெற்ற பொது மறை என்று இதை அழைப்பார்கள்.
வணிகம் பற்றி: பண்டைய காலங்களிலேயே தமிழர்கள் எகிப்து
, சீனா
, சிங்கப்பூர்
, மலேசியா
போன்ற நாடுகளுடன் வணிக தொடர்புகளை வெற்றிகரமாக நடத்தி வந்தனர். ஏலக்காய்(ஏலம்), கிராம்பு (இலவங்கம்) போன்றவை அதிக அளவில் வணிகம் செய்யப்பட்டன.
இது போக, தமிழர்கள் தமது அறிவு திறன்
, வணிக திறன்
, கலை
♂️, கல்வி
, மற்றும் அணைத்தையும் சென்ற இடமெல்லாம் அனைவருக்கும் கற்பித்து தமிழின் பெருமையை அப்பொழுதே உயர்த்தியுள்ளனர்.
இவை அனைத்தையும் பாரதியார் செந்தமிழ் நாடெனும் என்ற பாடல் மூலம் அழகாக வடிவமைத்துள்ளார்.
பொருள் விளக்கம்
போதினிலே = பொழுதில்
மேவிய = பொருந்திய
மேனி = உடல் (தமிழ்நாட்டின் பகுதிகள்)
பார் = உலகம்
வீசும் = பரவும்
வான் = உயர்ந்த
மிசிரம் = எகிப்து
யவனரகம் = கிரேக்கம்
படைத்தொழில் = போர்த் தொழில்.