எண்டோதீசியம் மகரந்தப்பை வெடித்தலுடன் தொடர்புடையது. இக்கூற்றை நியாயப்படுத்துக
Answers
Answered by
1
எண்டோதீசியம் மகரந்தப்பை வெடித்தலுடன் தொடர்புடையது
எண்டோதீசியம்
- புறத்தோலுக்குக் கீழாக ஆரப்போக்கில் நீண்ட ஓரடுக்கு செல்களால் எண்டோதீசியம் உருவாக்கப்படுகிறது.
- உட்புற கிடைமட்டச் சுவர் அல்லது ஆரச்சுவர் ஆனது செல்லுலோசால் ஆன அல்லது லிக்னினால் ஆன பட்டைகளை தோற்றுவிக்கிறது.
- நீர் உறிஞ்சும் தன்மை (hygroscopic) கொண்டவையாக எண்டோதீசிய திசுக்கள் உள்ளன.
- மகரந்தப்பைகளில் வேறுபாடு அடையாத எண்டோதீசியம் ஆனது நீர்வாழ்த் தாவரங்கள், சாற்றுண்ணித் தாவரங்கள், மூடிய பூக்களைக் கொண்ட தாவரங்கள் மற்றும் தீவிர ஒட்டுண்ணித் தாவரங்களில் காணப்படுகின்றன.
- இரண்டு வித்தகங்களை இணைக்கும் ஒரு மகரந்த மடல் பகுதியில் அமைந்த செல்களில் தடிப்புகள் காணப்படுவது கிடையாது.
- இந்த பகுதிக்கு ஸ்டோமியம் என்று பெயர்.
- முதிர்ந்த மகரந்தப்பை வெடிப்பில் எண்டோதீசியத்தின் நீர் உறிஞ்சுதன்மையும், ஸ்டோமியமும் முக்கிய பங்கு வகிக்கின்றது.
Similar questions