India Languages, asked by StarTbia, 1 year ago

நும்பேர் எழுதாதே வேறொருபேர் முன்னெழுத வேண்டிய காரணம் என்கொல்? - யார் யாரிடம் கூறியது?
குறுவினாக்கள்
பெரியபுராணம்

Answers

Answered by gayathrikrish80
0

விடை:


திருநாவுக்கரசர், அப்பூதியார் அமைத்த தண்ணீர்ப்பந்தலில் தம் பெயர் எழுதப்பட்டிருப்பது கண்டு அப்பூதியாரிடம், "நும்பேர் எழுதாதே வேறொரு பேர் முன்னெழுத வேண்டிய காரணம் என்கொல்?" எனக் கேட்டார்.


விளக்கம்:


நாவுக்கரசர், அப்பூதி அடிகளார் அமைத்த தண்ணீர்ப்பந்தலைக் கண்டார். தென்றல் தவழும் குளிர்ச்சியான அதன் சூழலையும், அங்கு வழங்கப்படும் அமுதம் போன்ற தண்ணீரையும் கண்டு வியந்தார். அவ்வியப்புடன் அதைச் சுற்றிப் பார்த்தார்; அதன் எல்லாப் பக்கங்களிலும் 'திருநாவுக்கரசு தண்ணீர்ப்பந்தல்’ என்று தம் பெயர் எழுதப்பட்டிருப்பதைக் கண்டு பெருவியப்படைந்தார். 


அவர் அப்பூதியடிகளிடம், "சிவபெருமான் அடியார்களுக்காகத் தாங்கள் அமைத்த தண்ணீர்ப்பந்தலில் தங்கள் பெயரை எழுதாமல் வேறொருவர் பெயரை எழுதக் காரணம் என்ன?” என்று கேட்டார்.

Similar questions