திருநாவுக்கரசர் மூத்த திருநாவுக்கரசரை எங்ஙனம் உயிர்தெழச் செய்தார்?
குறுவினாக்கள்
பெரியபுராணம்
Answers
விடை:
திருநாவுக்காசர் சிவபெருமான் அருளை வேண்டினார்; ஒன்றுகொலாம் எனத் தொடங்கும் திருப்பதிகம் பாடிப் பாம்பின் விடத்தினைப் போக்கி, இறந்த மூத்த திருநாவுக்கரசை மீண்டும் உயிர் பெற்றெழச் செய்தார்.
விளக்கம்:
திருநாவுக்கரசர் மூத்த திருநாவுக்கரசரை கூப்பிட்ட போது, அப்பூதியார் "இப்போது ஆவன் இங்கு உதவான்" எங்க கூறக் கேட்ட நாவுக்கரசரின் திருவுள்ளத்தில் இறைவன் அருளால் ஒரு தடுமாற்றம் ஏற்பட்டது. உடனே அவர், உண்மை காரணத்தை அப்பூதியாரிடம் வினவினார். திருநாவுக்கரசர் கேட்ட பின்பும் உண்மையை மறைத்தல் ஒழுக்கமன்று என்று எண்ணி, மைந்தனுக்கு நேர்ந்த துன்பத்தை வருத்தத்துடன் அப்பூதியார் கூறினார்.
அது கேட்டு நாவுக்கரசர், வியப்புற்று, விரைந்து எழுந்தார். அப்பூதியாருடன் சென்று இறந்து கிடந்த மூத்த திருநாவுக்கரசின் உடலைக் கண்டார். இறைவன் அருளை வேண்டி ‘ஒன்று கொலாம்’ என்று தொடங்கும் பாவிசைப் பதிகம் பாடிப் பாம்பின் நஞ்சு நீங்கச்செய்து, இறந்த மூத்த திருநாவுக்கரசை மீண்டும் உயிர் பெற்றெழச் செய்தார்.