மூத்த திருநாவுக்கரசுக்கு நேர்ந்ததென?
குறுவினாக்கள்
பெரியபுராணம்
Answers
விடை:
மூத்த திருநாவுக்கரசு, தன் பெற்றோரின் ஏவலின்படி வாழைக்குருத்து அரிந்து வர தோட்டத்தினுள் நுழைந்தான். பெரிய வாழையின் வளமான வாழைக்குருத்தை அரிகையில், பாம்பொன்று அவன் வருந்தும் வகையில் உள்ளங்கையில் தீண்டியது.
விளக்கம்:
திங்களூருக்கு வருகை தந்த நாவுக்கரசரை அப்பூதியார், தம் இல்லத்தில் அமுதுண்ன வேண்டினார். நாவுக்கரசர் இசையவே அப்பூதியாரின் மனைவியார் அறுசுவையுடன் உணவு சமைத்தார். அடியவர் அமுதுண்ன வாழைக்குருத்தை அரிந்து கொணருமாறு பெற்றோர் இருவரும் தம் மைந்தர்களுள் மூத்தவரான திருநாவுக்கரசை அனுப்பினர்.
வாழைக்குருத்தை கொணரச் சென்ற மூத்த திருநாவுக்கரசைப் பாம்பு ஒன்று தீண்டி இறந்தான். இதை நாவுக்கரசர் அறிந்தால் தம் வீட்டில் உணவு உண்ணும் பேற்றைத் தவறவிடுவோம் என்று மகனின் மரணத்தை மறைத்து நாவுக்கரசருக்கு அது சிறிதும் தெரியா வண்ணம், அப்பூதியார் நாவுக்கரசரிடம் சென்று அமுது செய்ய எழுந்தருள வேண்டினர்.