India Languages, asked by StarTbia, 1 year ago

"இப்பொது இங்கு அவன் உதவான்" - யார் யாரிடம் கூறியது?
குறுவினாக்கள்
பெரியபுராணம்

Answers

Answered by gayathrikrish80
0

விடை:


தம் மகன் பாம்பால் தீண்டப்பட்டு இறந்தான் என்பதை மறைத்து, அப்பூதியடிகள், "இப்போது இங்கு அவன் உதவான்" என திருநாவுக்கரசரிடம் கூறினார்.


விளக்கம்:


நாவுக்கரசர் அமுதுண்ண வேண்டும் என்னும் ஆவலால், தம் மகன் மூத்த திருநாவுக்கரசு, பாம்பு தீண்டி இறந்ததை மறைத்து அப்பூதியார், நாவுக்கரசரை உணவுண்ன எழுந்தருளுமாறு வேண்டினார். நாவுக்கரசர் உணவு உண்ணும் முன்பு திருநீறு வழங்கினார். அப்போது மூத்த திருநாவுக்கரசு காணாமையால் அவனைக் காட்டுமாறு கேட்டார். 


உண்மையைக் கூறினால் நாவுக்கரசர் உண்ணமாட்டார்; மறைப்பதும் பொய் கூறுவதாய் ஆகும். எனவே, அப்பூதியார், இந்த நேரத்துக்கு அவன் இங்கு வந்து உதவ மாட்டான், என்றார்.

Similar questions