திரைப்படம் எடுத்தலுக்குத் தேவையான ஆயத்தப்பணிகளைத் தொகுத்தெழுதுக.
நெடுவினாக்கள்
திரைப்படக் கலை உருவான விதம்
Answers
விடை:
திரைப்படம் எடுத்தலுக்குத் தேவையான ஆயத்தப்பணிகள்:
கதையும் கதைமாந்தரும் தேர்வு செய்தல் :
திரைப்படம் எடுக்க முதலில் திரைப்படக் கதையையும் கதைமாந்தரையும் தேர்வு செய்வர். பின், கதைக்கேற்ற உரையாடல்கள், பாடல் முதலியனவற்றை எழுதி ஆயத்தப்படுத்திக்கொள்வர். பின்னர், திரைப்பட நடிகர், நடிகையர் அவர்களுக்குத் தோழர், தோழியர், பணியாளர் எனப் பலர் தேர்வு செய்யப்படுவர். நடிப்பவர்களுக்கும் கதைகளுக்கும் ஏற்ற உடைகள் தயாரிக்கப்படும்.
படப்பிடிப்பு :
ஒரு படத்தின் தொடக்கம் முதல் முடியும் வரை உழைக்கும் நுண்மாண் நுழைபுலமுடையவராய் இயக்குநர் இருப்பார். அவர் படப்பிடிப்பு செய்யும் போது நடிப்பாற்றலை எடுத்துக் கூறியும், சில நேரங்களில் தாமே நடித்தும், காட்சிகள் அமைத்து படப்பிடிப்பு சிறப்பாக அமைய உழைப்பார். அவருக்கு உதவியாய்த் துணை இயக்குநர் பணியாற்றுவார். இவ்வாறு படம் எடுத்தலை படப்பிடிப்பு என்பர்.
காட்சிகளைப் படம் பிடித்தல் :
இயக்குனரின் வழிகாட்டுதலின்படி ஒளி - ஒலிப்பதிவுகளை அதற்குரிய கருவிகள் கொண்டு பதிவு செய்வர். நடிகரின் குரல் இனிமையாய் இல்லாவிடில் மற்றொருவர் குரல் பயன்படுத்தப்படும் முறையும் சாத்தியமாயிற்று.