திரைப்படக் காட்சி எவ்வாறு பதிவு செய்யப்படுகிறது?
சிறுவினாக்கள்
திரைப்படக் கலை உருவான விதம்
Answers
திரைப்படக்காட்சி பதிவு செய்யும் முறை:
ஒலி - ஒளிப்படக்கருவி என்பதன் மூலம் திரைப்படக்காட்சி பதிவு செய்யப்படுகிறது. இக்கருவியில் மேற்பக்கம் ஒன்றும் கீழ்பக்கம் ஒன்றுமாக இரு வட்டவடிவ பெட்டிகள் இருக்கும். ஒளி உணர்வு செல்லுலாய்ட் சுருள் மேற்பக்கமுள்ள உருளைப் பேட்டியில் பொருத்தப்பட்டு கீழ்பக்கமுள்ள பெட்டியில் சேறும் வகையில் பல பற்சக்கரங்கள் வழியாக இணைக்கப்படும். ஒளிப்படப்பதிவு கருவியின் முகப்பில் ஒரு குழிலென்ஸ் பொறுத்தப்பட்டிருக்கும். இது ஒளிக்காட்சிகளை செல்லுலாய் சுருளில் பதிவு செய்யும். ஒரு இயக்கப்படம் வினாடிக்கு 24 சட்டங்கள் நகரும் வண்ணம் இருக்க வேண்டும். அதற்கு ஏற்ப பற்சக்கரங்கள் அமைக்கப்பட்டு செல்லுலாய்ட் சுருளைச் சட்டங்களாக நகரச்செய்து ஒளிப்பதிவு செய்யப்படுகிறது.
உரையாடல்கள், பாடல்களின் ஒலிகளை, ஒலி-ஒளிபடக்கருவினுள் உள்ள கருவியின் மூலம் மின்னணுக்கலாக மாற்றி ஒளிக்கற்றையை பாய்ச்சும் கருவியினுள் செலுத்தப்படும் போது அவ்வொளி அலைகள் அதிர்வுறும். இவ்வதிர்வுற்ற ஒளிக்கற்றை செல்லுலாய்ட் சுருளின் ஓரங்களில், ஒளிக்காட்சிப் பதிவுக்கு இணையாகப் பதிவு செய்யப்படும்.
Here's your answer