படப்பிடிப்புக் கருவி குறித்து எழுதுக.
சிறுவினாக்கள்
திரைப்படக் கலை உருவான விதம்
Answers
விடை:
திரைப்படத்தில் ஒளிப்பதிவு செய்யப் படப்பிடிப்புக்கருவி இன்றியமையாதது. படப்பிடிப்பின்போது படப்பிடிப்புக்கருவி அசைந்தால் படம் தெளிவாய் இராது. ஆகையால், உறுதியான ஒரு இடத்தில் அக்கருவியைப் பொருத்திவிடுவர். சிலர், படப்பிடிப்புக்கருவியை நகர்த்தும் வண்டியில் பொருத்துவதும் உண்டு. படப்பிடிப்புக் கருவியில் ஓரடி நீளமுள்ள படச்சுருளில் பதினாறு படங்கள்வீதம் ஒன்றன்பின் ஒன்றாய்த் தொடர்ச்சியாய் எடுக்கப்படும்.
விளக்கம்:
1830இல் ஒளிப்படம் எடுக்கும் முறையைக் கண்டுபிடித்த பின்னர், இயக்கத்தைப் படம் பிடிக்க முயன்றனர். எட்வர்டு மையிரிட்சு என்ற ஆங்கிலேயர் முதலில் ஓடும் குதிரையின் இயக்கத்தைப் படம் எடுத்து வெற்றி பெற்றார். ஈஸ்ட்மன் என்பார் படச்சுருள் உருவாக்கும் முறையைக் கண்டுபிடித்தார். எடிசன், ஒருவர் மட்டும் பார்க்கும் படக்கருவியைக் கண்டுபிடித்தார். பிரான்சிஸ் சென்கின்சு என்பார் 1894இல் ரிச்மண்ட் என்னுமிடத்தில் இயக்கப்படத்தைப் பலரும் பார்க்கும் வகையில் வடிவமைத்தார். புதிய பட வீழ்த்திகள் உருவாக இவரது கருத்துக்களே அடிப்படையாக அமைந்தன.