ஐகாரக்குறுக்கம் எத்தனை வகைப்படும்?
Answers
Answered by
4
ஐகாரக் குறுக்கம் என்பது, ஐகாரம் தனக்குரிய இரண்டு மாத்திரையிலிருந்து குறைந்து ஒன்றரை மாத்திரையாகவும் ஒரு மாத்திரையாகவும் ஒலிக்கும் நிலையை அடைதல்.
Explanation:
ஐகாரம் + குறுக்கம் = ஐகாரக்குறுக்கம்.
ஐகாரம் தன்னைச் சுட்டித் தனித்து எழுத்தாகக் கூறும்பொழுதோ பிறவற்றைச் சுட்டி ஓரெழுத்து ஒரு மொழியாகத் தனித்து நிற்கும் பொழுதோ இரண்டு மாத்திரையளவு ஒலிக்கும். அந்த ஐகாரம் ஒரு சொல்லில் முதல், இடை, கடை ஆகிய இடங்களில் வரும்பொழுது, மொழிக்கு முதலில் ஒன்றரை மாத்திரையாகவும் இடை மற்றும் கடையில் ஒரு மாத்திரையாகவும் குறைந்து ஒலிக்கும். இவ்வாறு குறைந்து ஒலிப்பதே ஐகாரக் குறுக்கமாகும்.
∆∆∆∆∆∆
தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா!!! ❤
Similar questions