வயலின் வரப்புகளாகக் கூறப்படுபவை யாவை?
சிறுவினாக்கள்
தமிழ்விடு தூது
Answers
விடை:
வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா ஆகிய நால்வகைப் பாக்களும் தமிழ்ப்பயிர் விளையும் செய்யுள் என்ற வயலுக்கு வரப்புகளாக கூறப்படுகின்றன.
விளக்கம்:
தமிழ்விடு தூது, தமிழைப் பயிராய் உருவகம் செய்து, தமிழ் செழித்து வளர்ந்ததாக கூறுகிறது. இதில் செய்யுள் வயலாய் அமைந்ததாகவும், அச்செய்யுளுள் வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா ஆகிய நால்வகைப் பாக்கள் வயலுக்கு வரப்புகள் ஆகின;
தாழிசை, துறை, விருத்தம் என்னும் பாவினங்கள் மடைகளாக அமைந்தன என்றும், மனம், புத்தி, சித்தம், அகங்காரம் ஆகிய நாற்கரணங்களையே ஏர்களாகப் பூட்டி உழுதனர் என்றும் வைதருப்பம், கௌடம், பாஞ்சாலம், மகதம் ஆகிய நான்கு நெறிகளையே விதைகளாயும், அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நாற்பொருள்களை விளைவித்ததாயும், போலிப் புலவர்களை களைகளுக்கு ஒப்பாயும் "அரியாசனமுனக்கே " எனத் தொடங்கும் தமிழ் விடு தூது பாடல் உருவகம் செய்கிறது.