வயல் தரும் விளைவுகளாகத் தமிழ்விடு தூது கூறுவன யாவை?
சிறுவினாக்கள்
தமிழ்விடு தூது
Answers
விடை:
அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்கு நெறிகளையே தமிழ் வயல் தரும் விளை பொருள்களாகத் தமிழ் விடு தூது விளக்குகிறது.
விளக்கம்:
தமிழ்விடு தூது, தமிழைப் பயிராய் உருவகம் செய்து, தமிழ் செழித்து வளர்ந்ததாக கூறுகிறது. இதில் செய்யுள் வயலாய் அமைந்ததாகவும், அச்செய்யுளுள் வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா ஆகிய நால்வகைப் பாக்கள் வயலுக்கு வரப்புகள் ஆகின;
தாழிசை, துறை, விருத்தம் என்னும் பாவினங்கள் மடைகளாக அமைந்தன என்றும், மனம், புத்தி, சித்தம், அகங்காரம் ஆகிய நாற்கரணங்களையே ஏர்களாகப் பூட்டி உழுதனர் என்றும் வைதருப்பம், கௌடம், பாஞ்சாலம், மகதம் ஆகிய நான்கு நெறிகளையே விதைகளாயும், அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்கு நன்னெறிகளை விளை பொருள்களாயும், போலிப் புலவர்களை களைகளுக்கு ஒப்பாயும் "அரியா சனமுனக்கே " எனத் தொடங்கும் தமிழ் விடு தூது பாடல் உருவகம் செய்கிறது.