போலிப்புலவர்களைத் தாண்டிப்போர் யாவர்?
சிறுவினாக்கள்
தமிழ்விடு தூது
Answers
Answered by
0
குறிப்பு:
கேள்வியில் "தாண்டிப்போர்" என்ற சொல்லை "தண்டிப்போர்" என படிக்கவும்.
விடை:
போலிப் புலவர்களை தண்டிப்போர் அதிவீரராம பாண்டியன், வில்லிபுத்தூரார் மற்றும் ஓட்டக்கூத்தர் ஆகியோர் ஆவர்.
விளக்கம்:
தமிழ்விடு தூது, தமிழைப் பயிராய் உருவகம் செய்து, தமிழ் செழித்து வளர்ந்ததாக கூறுகிறது. பயிர்கள் இடையே வளரும் களைகள் போல தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு இடையூறாக இருக்கும் போலிப் புலவர்கள் கூட்டம் பெருகாமல், அவர்களை குட்டுவதற்கு அதிவீரராம பாண்டியனும், காதில் துறடு மாட்டி செவியை அறுப்பதற்கு வில்லிபுத்தூராரும், தலை வெட்டுவதற்கு ஓட்டக்கூத்தனும் இருந்தமையால், தமிழ் மொழி செழித்து வளர்ந்ததாக, "அரியாசனமுனக்கே " எனத் தொடங்கும் தமிழ் விடு தூது பாடல் விளக்குகிறது.
Similar questions