India Languages, asked by StarTbia, 1 year ago

அகழாய்வு குறித்த செய்திகளைத் தொகுத்து எழுதுக
நெடுவினாக்கள்
தற்காலத் தொல்லியல் ஆய்வுகள்

Answers

Answered by gayathrikrish80
85

விடை:


அகழாய்வு செய்யும் வழிமுறைகள்:


அகழாய்வு என்பது வெறும் இயந்திரங்களைக் கொண்டு மண்ணை தோண்டுவதன்று. அவ்வாறு செய்வதால் தடயங்கள் சிதைந்து விடும். பல உண்மைகளை நாம் இழந்து விடுவோம். ஆகவே ஆய்வுக்குழுவினர் ஆய்விடத்திலுள்ள மண்ணை சில வழிமுறைகளைப் பின்பற்றி, மிக நுட்பமாகவும் பொறுமையுடனும் சிறுகச்சிறுகத் தோண்டித் தடயங்களைத் திரட்டுவார்கள்.


அகழாய்வு செய்யும்போது பூமியின் மேற்பரப்பிலிருந்து கீழாக குறிப்பிட்ட பகுதியினைச் சில வழிமுறைகளைப் பின்பற்றி அகழ்ந்து ஆய்வு செய்வார்கள். அகழாய்வினைப் பூமியின் மேற்பரப்பினில் மட்டுமன்றிக் குகைகளினுள்ளும் நீருக்கடியிலும் செய்யலாம். நீருக்கடியில் அகழாய்வு செய்வதன் மூலம் இயற்கைச் சீற்றங்களினால் முற்காலத்தில் நீரினுள் மறைந்த நகரங்களையும் துறைமுகங்களையும் பற்றிய அரிய பல செய்திகளை வெளிக்கொணர இயலும்.


அகழாய்வு செய்வதற்குரிய இடத்தை தேர்ந்தெடுத்தல் :


ஒரு நாட்டின் பழமையான இலக்கியங்கள், கல்வெட்டுகள், தற்செயலாய் கிடைக்கும் பொருள்கள் அகழ்வாய்விற்குரிய இடங்களைத் தெரிவு செய்வதற்கு உறுதுணையாய் இருக்கின்றன. அவற்றில் அக்காலத்தின் சிற்றூர்கள், நகரங்கள், துறைமுகங்கள், கோட்டைகள அரண்மனைகள் முதலியவற்றைப்பற்றிய குறிப்புகள் பரவலாய்க் காணப்படும். அவற்றின் துணைகொண்டு அகழாய்வு செய்வதற்கான இடங்களைத் தேர்ந்தெடுக்கின்றனர்.


அகழாய்வின் பயன்கள் :


அகழாய்வு செய்வதன் மூலம் பல்வேறுக் காலகட்டத்தில் வாழ்ந்த மக்கள் பயன்படுத்திய பொருள்கள் கிடைக்கும். வெவ்வேறு மண்ணடுக்குகளில் கிடைக்கும் பொருள்களைக் கொண்டு அம்மக்கள் வாழ்ந்த காலத்தினை முடிவு செய்வர்.


இவற்றின் அடிப்படையில்தான் ஒரு நாகரிகத்தின் கூறுகளை அறிந்துகொள்ள முடியும். ஓரிடத்தில் எப்போதிருந்து மக்கள் வாழத் தொடங்கினர், எத்தகைய பண்பாட்டிகை கொண்டு விளங்கினர் என்பன போன்ற வினாக்களுக்கு அகழாய்வின் மூலம் உரிய விடைகளைக் கூற இயலும்.

Similar questions