India Languages, asked by StarTbia, 1 year ago

நந்திவர்மன் பெருமைகளாக நந்திக்கலம்பகம் கூறுவன யாவை?
சிறுவினாக்கள்
நந்திக் கலம்பகம்

Answers

Answered by shubhii99
1
as in English?????.......
Answered by gayathrikrish80
4

விடை:


"பதிதொரு புயல்பொழி தருமணி" என்று தொடங்கும் நந்திக் கலம்பக பாடல், ஒன்பதாம்  நூற்றாண்டை சேர்ந்த நந்திவர்மனின் பெருமைகளை போற்றும் வகையில் அமைந்துள்ளது.


ஊர் தோறும் மேகங்கள் சொரிகின்ற மணிகளையும், மூங்கில்கள் தந்த பெரிய முத்துக்களையும் கொடுத்து, அவ்வூர்களில் விளையும் நெற்கதிரைத் பெற்றுக் கொண்டு வருகின்ற நீர், கரையோடு மோதி வழியும் காவிரியின் வளம் பொருந்திய நாட்டையுடையவனே! நீதிநெறி தவறாத மன்னன் ஆதலால் ‘நிதிதரு கவிகை’ என்று செல்வம் குறையா அரசாட்சி உடையவன் நந்திவர்மன் என்றும், 


‘நிலமகள் உரிமை’ என்று இவ்வுலகை ஆளும் உரிமையுடைய போர்த்திறம் பெற்ற நந்திவர்மனின் தாமரைப் பாதங்களை வணங்கி நின்று திறை செலுத்தாத மன்னன், இவ்வுலகை ஆள முடியாது, மேலுலகை ஆளுபவனாக இறந்துபடுவான் என்று நந்திவர்மனின் பெருமைகளை போற்றும் விதமாக சிறப்பித்துக் கூறப்பட்டுள்ளது.

Similar questions