India Languages, asked by StarTbia, 1 year ago

நபிகள் நாயகத்திடம் புலி கூறியது என்ன?
குறுவினாக்கள்
சீறாப்புராணம்

Answers

Answered by gayathrikrish80
0

விடை:



“வேறொரு காட்டினிற் புகுக" என்று நபிகள் நாயகம் புலியிடம் சொன்னார். உடனே அது, அவரின் தாமரைப் பூப்போன்ற பாதங்களை வணங்கியது; “நன்று நன்று” என்று போற்றிப் புகழ்ந்து விட்டு அகன்றது.



விளக்கம்:



வேறொரு காட்டினிற் புகுக என்னும் தொடர், விலாதத்துக் காண்டம் – புலி வசனித்த படலத்தில் வரும் " இன்று தொட்டிவண் நெறியினில் " என்று தொடங்கும் பாடலில் வருகிறது.



நபிகள் நாயகம், புலியை பார்த்து, “நீ இன்று முதல் உயிர் வதை

செய்வதனை விடுத்து, இந்த இடத்திலிருந்து அகன்று வேறொரு

இடத்திற்கு செல்வாயாக” என்று அருளினார். அப்புலியானது,

முகம்மது நபியின் மணம் பொருந்திய தாமரைப் பூப்போன்ற

பாதங்களை வணங்கி, நன்று நன்று எனப்

புகழ்ந்தவாறே அந்த இடத்தினை விட்டு நடந்து சென்றது.


Similar questions