புலி வசனித்த படலத்தின்மூலம் நீயறியும் ஆறாம் யாது?
குறுவினாக்கள்
சீறாப்புராணம்
Answers
Answered by
0
விடை:
உலகிலுள்ள உயிரினங்கள் அனைத்தும் ஒன்றெனக் கருதுகின்ற அருளாளர்கள் முன் கொடிய உயிரினங்களும் பணிந்து நடக்கும் என்னும் அறத்தினைப் புலி வசனித்த படலம் மூலம் அறியலாம்.
விளக்கம்:
கேள்வியில் "ஆறாம்" என்பதை "அறம்" என்று படிக்கவும்.
''அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்'' என்று தமிழ்மறை கூறுகிறது. அன்பைப் போதிக்காத சமயங்கள் இல்லை என்றே கூறலாம். உயிரினங்களிடம் காட்டும் அன்பு ஜீவகாருண்யம் ஆகும். இஸ்லாம் அனைத்து உயிர்களிடத்திலும் அன்பு காட்டச் சொல்கிறது. “பூமியில் உள்ளவை மீது அன்பு காட்டுங்கள், வானத்தில் உள்ளவன் உங்கள் மீது அன்பு காட்டுவான்” என்று புனிதநூல் குரான் கூறுகிறது.
அதற்கு சான்றாக, அருளாளர் நபிகளை கண்டவுடன், கொடிய புலி கூட பணிந்து அவரின் அருள்வார்த்தைக்கு பணிந்த இந்த சம்பவம், ஜீவ காருண்யத்திற்கு மிகப்பெரிய சான்றாக அமைந்துள்ளது.
Similar questions