India Languages, asked by StarTbia, 1 year ago

சீறாப்புராணம் குறிப்பு எழுதுக.
சிறுவினாக்கள்
சீறாப்புராணம்

Answers

Answered by gayathrikrish80
22

விடை:



சீறா + புராணம் = சீறாப்புராணம்; ‘சீறத்’ என்னும் அரபுச் சொல்லின் திரிபே சீறா என்பது. சீறத் என்னும் அரபுச் சொல்லுக்கு வாழ்க்கை என்பது பொருள். இது இறைத்தூதர் நபிகள் நாயகத்தின் சீரிய வரலாற்றைக் கூறும் நூலாதலால் சீறாப்புராணம் என வழங்கலாயிற்று. புராணம் என்ற சொல்லுக்கு பழமையான வரலாறு என்பது பொருள். இந்நூல் விலாதத்துத் காண்டம், நுபுவ்வத்துக் காண்டம், ஹிஜ்ரத்துக் காண்டம் என்னும் மூன்று பெரும் பிரிவுகளையும், 92 படலங்களையும், 5027 விருத்தப் பாக்களையும் உடையது.



விளக்கம்:



சீறாப்புராணம் தொடங்க உமறுப்புலவருக்கு உதவியர் வள்ளல் சீதக்காதி ஆவார். சீதக்காதி மறைவுக்குப்பின் அந்நூல் முற்றுப்பெற வள்ளல் அபுல்காசிம் மரைக்காயர் உதவினார்.


Answered by arumugamp1906
5

Explanation:

சீறாப்புராணம் பற்றி குறிப்பு எழதுக

Similar questions