புலி வசனித்த படலத்தின் கருத்துகளைத் தொகுத்து எழுதுக.
நெடுவினாக்கள்
சீறாப்புராணம்
Answers
விடை:
முகம்மது நபியிடம் முறையிடுதல் :
முகம்மது நபியும் அவருடன் வந்த வணிகர் கூட்டத்தினரும் நதியையும் காடுகளையும் கடந்து ஷாம் நகர் நோக்கிச் சென்றனர். செல்லும் வழியில் தெளிந்த அலைகளுடைய ஆற்றினையும் கொடிய யானைகள் வாழும் பல காட்டினையும் கடந்து வந்த ஒருவன், அகமது என்னும் திருப்பெயர் பெற்ற முகம்மது நபியைப் பணிந்து சொன்னான். "இங்கிருந்து ஒரு காத தூரத்தில், பெரிய அகழி போன்ற ஓர் ஒடைக்கருகில் அடர்ந்த மரங்களுடைய காட்டில் புலி ஒன்று உள்ளது. அது தரையில் அமர்ந்து, உடலை நிமிர்த்தி, கண்கள் தீப்பொறி உமிழ, வெண்ணிறப் பற்கள் ஒளி வீச, வாயினில் இறைச்சி நாற்றம் எழக் கோபத்துடன் அமர்ந்திருக்கும்.”
புலியின் வெறிச்செயல் :
"அப்புலி, கூர்மையான நகங்களுடைய சிங்கங்களை தவிர்த்து பிற விலங்குகளின் இறைச்சினை உண்ணும். பனை போன்ற யானையைப் பிடித்து இழுத்து, அதன் மார்பினைக் கீறி இரத்தத்தைக் குடிக்கும்; உறங்காது நின்று மலைகள் அதிரும்படி இடியென உறுமும், அப்புலியின் ஓசையினைக் கேட்டு பெரிய காட்டெருமைகளும், பிளந்த பாதங்களையுடைய பன்றிகளும், அடர்ந்த முடிகளுடைய கரடிகளும், கலைமான்களும் நிலத்தில் பதியப்பெற்ற தம் கால்கள் நடுக்கமுற்றுக் கீழே விழும்." எங்கே உள்ளது அப்புலி? இவ்வாறு புலியைப்பற்றி அவன் சொன்ன செய்திகளைக் கேட்டு முகம்மது நபியின் இரு தோள்களும் மலைபோல் பெருத்தன. அவர் புன்முறுவலுடன் "அப்புலி இருக்குமிடம் எது?" என்று கேட்டார். அவன், "அது அருகில் இருக்கிறது," என்றான்.
பணிந்து வணங்கிய புலி :
சிங்கத்திற்கு ஒப்பாகிய முகம்மது நபி, மலை போன்ற தோள்கள் அசையும்படி, கூர்மையான ஒளிவிடும் வேற்படையினை வலக்கையில் அழகுடன் ஏந்தியவாறு புலி இருக்குமிடம் நோக்கிச் சென்றார். அவர் வருவதைப் பார்த்ததும், கூர்மை பொருந்திய நகத்தினையும் திண்ணிய வலிமையும் உடைய புலி, தனது வால் வளைத்து நடுக்கமுற்று பையப் பைய வந்து தலையத் தாழ்த்தி பார்த்து "நீ இன்று முதல் உயிர்வதை செய்வதினை விடுத்து வேறு ஒரு காட்டினுக்குச் சென்றுவிடு” என்றார். அதைக் கேட்டு, அவரது தாமரைப் பாதங்களை வணங்கி, “நன்று, நன்று” எனச் சொல்லிவிட்டு அவ்விடத்திலிருந்து அகன்றது.
நபிகளின் அருஞ்செயல் கண்டு வியந்து போற்றுதல் :
கொலைத்தொழில் புரியும் அப்புலி, உடல் மண்ணில் படிய முகம்மது நபியின் திருவடிகளைப் பணிந்து வணங்கியதால் ‘இவர் இறைத் தூதர் தாம்’ என்று தெளிந்த அறிவுடையோர் உண்மை உணர்ந்து உறுதி கொண்டனர்.