தேவாரம் - பொருள் எழுதுக
குறுவினாக்கள்
தேவாரம்
Answers
விடை:
தேவாரம் - தே + வாரம் - தெய்வத்தைப்பற்றிய இன்னிசைப் பாடல் தே - தெய்வம்; வாரம் – இசைப்பாடல். தே + ஆரம் எனப் பிரித்துத் தெய்வத்திற்கு அணியும் பூமாலை போன்ற பாமாலை என்றும் கூறலாம். ஆரம் - மாலை.
விளக்கம்:
தேவாரங்கள் எனப்படுபவை சைவ சமயத்தின் முழுமுதற் கடவுளான சிவபெருமான் மீது, திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார், திருநாவுக்கரசு நாயனார், சுந்தரமூர்த்தி நாயனார் ஆகிய நாயன்மாரால் தமிழிற் பாடப்பட்ட பாடல்கள் ஆகும். முதல் இருவரும் கிபி 7ம் நூற்றாண்டிலும், மூன்றாமவர் கிபி 8ம் நூற்றாண்டிலும் இவற்றைப் பாடியதாகக் கருதப்படுகிறது. தேவாரங்கள் பதிக வடிவிலே பாடப்பட்டுள்ளன. பதிகம் என்பது பத்துப் பாடல்களைக் கொண்டது.
தேவாரங்கள் பழந்தமிழ் இசையையொட்டிய பண்களுடன் பாடப்பட்டு வருகின்றன. சைவக் கோயில்களிலும், சைவர்கள் வீடுகளிலும், பாடசாலை முதலிய இடங்களில், சமய நிகழ்ச்சிகளின் போதும் தேவாரங்கள் இன்றும் பாடப்பட்டு வருகின்றன.